தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

மற்றவர்களை கனிவுடன் நோக்கி கதைகளைப் பகிர்வோம்

சந்திப்பு என்பது வாழ்வை மாற்றவல்லது. இயேசுவுடனான சந்திப்புகள் மற்றவரின் வாழ்வை உயர்த்தியதையும் குணப்படுத்தியதையும் நற்செய்தி காட்டுகிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

நாம் யாரைப் பார்த்து வாழ அழைக்கப்பட்டிருக்கிறோமோ அந்த இயேசுவுக்கு நெருக்கமாக இருப்பது என்பது, வாழ்வில் மக்களை சந்தித்து அவர்களுடன் நம் கனிவானப் பார்வையையும் வாழ்வுக் கதைகளையும் பகிர்வதைக் குறிக்கும் என மே மாதம் 7ஆம் தேதி தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சந்திப்பு என்பது ஒருவரின் வாழ்வை மாற்றவல்லது, இயேசுவுடனான சந்திப்புகள் மற்றவரின் வாழ்வை உயர்த்தியது மற்றும் குணப்படுத்தியது குறித்து நற்செய்தியில் நிறைய நிகழ்ச்சிகள் காணக்கிடக்கின்றன என அச்செய்தியில் கூறும் திருத்தந்தை, இயேசுவின் வாழ்வை வாழ்ந்திட அழைக்கப்பட்டிருக்கும் நாம் அவருடன் நெருக்கமாக இருக்கவேண்டுமெனில் நம்மைச் சுற்றியிருப்பவர்களை சந்திப்பதுடன் அவர்களுடன் நம் கனிவானப் பார்வையையும் கதைகளையும் பகிர முன்வரவேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.

2012ஆம் ஆண்டு திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களால் துவக்கப்பட்ட திருத்தந்தையரின் டுவிட்டர் பக்கத்தில் இதுவரை ஆங்கில மொழியில் 5421 டுவிட்டர் குறுஞ்செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. 1 கோடியே 85 இலட்சம் பேர் இந்த குறுஞ்செய்திகளைப் பார்வையிட்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 May 2024, 16:11