தேடுதல்

செயற்கை நுண்ணறிவால் செயற்கை நுண்ணறிவால்   (REUTERS)

இதயத்தின் ஞானத்தை இழக்காதீர்கள் : திருத்தந்தை பிரான்சிஸ்

கடந்த ஜனவரி மாதம் 24-ஆம் தேதி, புதனன்று, 'செயற்கை நுண்ணறிவு மற்றும் இதயத்தின் ஞானம்: ஒரு முழு மனித தகவல் தொடர்பு நோக்கி' என்ற கருப்பொருளில் 58-வது உலக சமூகத் தொடர்பு நாளுக்கான செய்தியை வழங்கியிருந்தார் திருத்தந்தை.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மே 12, இஞ்ஞாயிறன்று, 58-வது உலக சமூகத் தொடர்பு தினத்தை உலகின் பல நாடுகள் சிறப்பித்த வேளை, செயற்கை நுண்ணறிவால் பெருகிய முறையில் ஊடுருவி வரும் உலகில், இதயத்தின் ஞானத்தை ஒருபோதும் இழக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்  திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கானின் பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலிக்கு உரைக்குப் பின்பு இத்தகையதொரு வேண்டுகோளை அவர்களிடம் முன்வைத்த திருத்தந்தை, இதயத்தின் ஞானத்தை மீட்டெடுப்பதன் வழியாக மட்டுமே நமது காலத்தின் தேவைகளை விளக்க முடியும் மற்றும் முழு மனித தொடர்புக்கான பாதையை மீண்டும் கண்டுபிடிக்க முடியும் என்றும் விளக்கினார்.

மேலும் இந்நாளில் தகவல் தொடர்பு துறையில் பணிபுரியும் அனைவருக்கும் அவர்களின் பணிக்காக நன்றி தெரிவிக்க மறக்கவில்லை திருத்தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அன்னையர் தினம்

மே 12, இஞ்ஞாயிறன்று உலகின் பல நாடுகளில் அன்னையர் தினம் சிறப்பிக்கப்படுவதாகக் கூறிய திருத்தந்தை, அனைத்து அன்னையர்களையும் நன்றியுடன் நினைவுகூர்வோம் என்றும், இறைபதம் அடைந்த அன்னையர்கள் அனைவருக்காகவும் இறைவேண்டல் செய்வோம் என்றும் கூறினார்.

மேலும் அனைத்து அன்னையர்களையும் விண்ணக அன்னையாம் கன்னி மரியாவிடம் ஒப்படைப்போம் என்று கேட்டுக்கொண்டதுடன் அவர்களின் தியாகமிக்க பணிகளுக்காக கரவொலி எழுப்பவும் திருப்பயணிகள் அனைவரிடமும் விண்ணப்பித்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 May 2024, 14:31