தேடுதல்

அருள்பணியாளர்களுடன் உரையாடும் திருத்தந்தை பிரான்சிஸ் அருள்பணியாளர்களுடன் உரையாடும் திருத்தந்தை பிரான்சிஸ்   (Vatican Media)

அருள்பணியாளர்களே, நன்மை செய்வதில் சோர்வடைய வேண்டாம்!

இந்நிகழ்வின்போது இளம் மற்றும் வயது முதிர்ந்த பெண் துறவியரையும் சந்தித்த திருத்தந்தை, அவர்களுடன் பரிசுப்பொருள்களை பரிமாறியும், அளவளாவி உரையாடியும் மகிழ்ந்தார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அருள்பணியாளர்களே, உங்களுக்கு என் வாழ்த்துக்களையும் ஆசீரையும் வழங்குகின்றேன், நன்மை செய்வதில் எப்போதும் சோர்வடைய வேண்டாம் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 29, இப்புதனன்று மாலை, புதிதாக அருள்பொழிவு செய்யப்பட்ட, அதாவது, பத்து ஆண்டுகளுக்கும் குறைவாகப் பணியாற்றிய அருள்பணியாளர்களை சந்தித்து உரையாடியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

முன்னதாக அருள்சகோதர்களால் வரவேற்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பின்னர் திருத்தந்தை புனித ஆறாம் பவுலரங்கில் ஒரு சிறிய இறைவேண்டலுக்குப் பிறகு அருள்பணியாளர்களுடனான தனது உரையாடலைத் தொடங்கினார்.

இந்தச் சந்திப்பு திருத்தந்தையின் மறைமாவட்ட அருள்பணியாளர்களுடனான இரண்டாவது சந்திப்பு ஆகும். செப்டம்பர் 2023 முதல் மே மாத தொடக்கம் வரை, அவர் உரோமையின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பங்குத்தள அருள்பணியாளர்கள் மற்றும் தல நிர்வாகத் தலைவர்களைச் சந்தித்து அவர்கள் பணியில் சந்திக்கும் சவால்கள், சிரமங்கள், சாதனைகள் மற்றும் மனநிறைவுகளைக் கேட்டறிந்தார்.

மே 14, செவ்வாயன்று, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலிலுக்கு மிக அருகிலுள்ள Trionfale  புனித வளனார் பங்குத்  தளத்திற்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 40 ஆண்டுகளுக்கு முன்பு குருக்களாகத் திருநிலைப்படுத்தப்பட்ட 70 பேரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 May 2024, 13:29