ஒரு முன்மாதிரியான வாழ்வை முன்னிறுத்துங்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
விளையாட்டு வீரர்களே, உங்கள் பங்களிப்பு என்பது விளையாட்டுத் துறைக்கு அப்பாற்பட்டது மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையின் முன்மாதிரியாக மாறுவது என்று குறிப்பிட்ட திருதந்தை, நீங்கள் ஆன்மிக மற்றும் மனித குணங்களை வளர்த்துக்கொள்வது முக்கியம் என்றும், இதன் வழியாக நீங்கள் ஒரு நல்ல முன்மாதிரியான வாழ்வை முன்னிறுத்த முடியும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூன் 5, இப்புதனன்று, குரோஷியாவின் தேசிய கால்பந்து அணியினரைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, அவர்களின் விளையாட்டு மற்றும் சமூக நடவடிக்கைகளில் அவர்கள் வெற்றிபெற வாழ்த்துவதாகவும் தெரிவித்தார்.
கடந்த உலக சாம்பியன்ஷிப்பில், அவர்கள் மூன்றாம் இடத்தைப் பெற்றதற்காக அவர்களை வாழ்த்தியதுடன், கால்பந்து என்பது ஒரு உலகளாவிய நிகழ்வு என்றும், அதிக எண்ணிக்கையிலான மக்களை ஈடுபடுத்தும் திறன் கொண்ட, உணர்வுகளைக் கிளர்ந்தெழச் செய்யும், மற்றும் கூட்டு உணர்வுகளைக் கொண்ட ஓர் உலகளாவிய விளையாட்டு என்றும் கூறியுள்ளார்.
கால்பந்து விளையாடும் கால்பந்து விளையாட்டின் வழியாக, நீங்கள் ஓர் அணியை உருவாக்குகிறீர்கள், உங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மரியாதை உங்களுக்கு இருக்கிறது என்றும் எடுத்துக்காட்டிய திருத்தந்தை, ஒரு குழுவை உருவாக்குவது என்பது விளையாட்டின் ஒரு அம்சமாகும் என்றும், இதை நான் வலியுறுத்த விரும்புகிறேன், ஏனென்றால் நீங்கள் வாழும் மற்றும் மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றும் பல்வேறு சூழல்களில் இது சமூக வாழ்க்கைக்கான ஒரு உருவகமாக அமைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்