தேடுதல்

உக்ரேனிய மருத்துவமனைக்கு திருத்தந்தை அவர்கள் அளிக்கும் மூன்றாவது மருத்துவ அவசர ஊர்தி உக்ரேனிய மருத்துவமனைக்கு திருத்தந்தை அவர்கள் அளிக்கும் மூன்றாவது மருத்துவ அவசர ஊர்தி 

உக்ரேனிய மருத்துவமனைக்கு திருத்தந்தையின் மருத்துவ உதவிகள்

பிறரன்புப் பணிகளுக்கான திருப்பீடத்துறை தலைவர் கர்தினால் Konrad Krajewski அவர்கள் எட்டாவது முறையாக மேற்கொள்ளும் பயணம், திருத்தந்தை அவர்கள் உக்ரைன் மக்கள் மீது கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறது.

ஜெயந்த் ராயன், வத்திக்கான்

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, மருத்துவ தேவைக்கான அவசர ஊர்தி மற்றும் மருந்துப் பொருட்களை, பிறரன்புப் பணிகளுக்கான திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் Konrad Krajewski வழியாக உக்ரைன் நாட்டிற்கு அனுப்பியுள்ளார்  திருத்தந்தை பிரான்சிஸ்.

எட்டாவது முறையாக உக்ரைன் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் கர்தினால் அவர்கள், திருத்தந்தையின் பெயரால் வத்திக்கான் மருந்தகத்திலிருந்தும், உரோமையின் ஜெமெல்லி மருத்துவமனையிலிருந்தும் ஏராளமான அத்தியாவசிய மற்றும் உயிர்காக்கும் மருந்துகளுடன் பயணம் மேற்கொண்டுள்ளார்.

போரின் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் மற்றும் உளவியல் மறுவாழ்வுக்கு உதவுவதற்காக, Kamyanets-Podilskyy கத்தோலிக்க மறைமாவட்டப்  பகுதியான Vinnytsiaவில் கட்டப்பட்டுள்ள ''திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் மறுவாழ்வு மையத்தை'' திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சார்பாக திறந்து வைக்கிறார் கர்தினால் Krajewski.

மேலும், இம்மையம் எந்த பாகுபாடும் பார்க்காமல் அனைவருக்குமான மையமாக இயங்கும் என்று செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

உக்ரேனிய மருத்துவமனைக்கு திருத்தந்தை அவர்கள் அளிக்கும் இம்மூன்றாவது மருத்துவ அவசர ஊர்தி, Ternopil பகுதியில் தொடர்ந்து நடைபெற்றுவரும் போரினால் காயமடைந்த இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களை மீட்கும் பணியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 June 2024, 13:05