தேடுதல்

campidoglio-வில் திருத்தந்தை campidoglio-வில் திருத்தந்தை   (ANSA)

உலகத்தின் பார்வையில் உரோமை தனித்தன்மை வாய்ந்த ஒரு நகரம்!

உலகின் தனித்தன்மையாக விளங்கும் உரோமை நகர், அதன் பல்வேறு பணிகளால் இத்தாலிய அரசுக்கும், திருஅவைக்கும், மற்றும் மனிதக் குடும்பத்திற்கும் உதவுவதில் அது சந்திக்கும் சவால்கள் மற்றும் பிரச்சனைகள் யாவும் அதன் வளர்ச்சிக்கான வாய்ப்புகளாகவே அமையும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உரோமை நகர் ஓர் உலகளாவிய மனப்பாங்குடன் செயலாற்றும் ஒரு நகரம் என்றும், இந்த மனப்பாங்கு என்பது பிறரன்புப் பணிகளிலும், வரவேற்பு மற்றும் விருந்தோம்பல் சேவையிலும் இருக்க விரும்புகிறது என்றும் கூறினார் திருத்தந்தை

ஜூன் 10, இச்செவ்வாயன்று, உரோமை நகர் நிர்வாக அலுவலகமான campidoglio-வில் நிகழ்த்திய உரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, அதன் பண்டைய வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, உலகத்தோடு அதன் தொடர்பு ஆகிவற்றைக் குறித்தும் நினைவு கூர்ந்தார்.

இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்தின் பணியின் வழியாகக் கொண்டாடப்பட்ட பல்வேறு புனித ஆண்டுகளால், ஐரோப்பிய பொருளாதார சமூகத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், இந்த அண்மைய வரலாற்றுக் கட்டங்களில் கூட, உரோமை நகர் எப்போதும் அதன் உலகளாவிய இறையழைத்தலை உறுதிப்படுத்தியுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

நல்லிணக்கத் திருப்பயணம்

இப்போது உரோமை 2025-ஆம் ஆண்டின் யூபிலி விழாவை நடத்த தயாராகி வருகிறது. இந்த நிகழ்வு ஒரு சமயம்சார் இயல்புடையது என்று கூறிய திருத்தந்தை, இவ்விழா இறைவனுடன் முழுமையான நல்லிணக்கத்தை இறை இரக்கத்திலிருந்து பெறுவதற்கான இறைவேண்டல் மற்றும் தவம் நிறைந்த திருப்பயணமாகும் என்றும் எடுத்துக்காட்டினார்.

உரோமை நகர் தனித்துவமானது. அதனால்தான் வரவிருக்கும் யூபிலி, இந்நகரத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, அதன் மரபமைதியை மேம்படுத்துகிறது மற்றும் பொதுப் பணிகளை மிகவும் திறமையாக மாற்றுகிறது, மையத்தில் மட்டுமல்ல, மையத்தையும் புறநகர்ப்பகுதிகளையும் நெருக்கமாகக் கொண்டு வருகிறது என்றும் தனது உரையில் பெருமிதம் கொண்டார் திருத்தந்தை.

உரோமை நகர் பெருமளவில் வளர்ந்து வருகிறது என்றும் இந்நகரின் நிர்வாக அலுவலர்கள்  மற்றும் நாட்டின் அதிகாரிகளின் சுறுசுறுப்பான மற்றும் தாராளமான ஒத்துழைப்பு இல்லாமல் இவற்றிற்குச் சாத்தியமில்லை என்றும் அவர்களிடம் கூறினார் திருத்தந்தை.

மனப்பான்மையின் சாட்சிகளாய் இருக்கட்டும்

உரோமை நகர் ஓர் உலகளாவிய மனப்பாங்குடன் செயலாற்றும் ஒரு நகரம் என்றும், இந்த மனப்பாங்கு என்பது பிறரன்புப் பணிகளிலும், வரவேற்பு மற்றும் விருந்தோம்பல் சேவையிலும் இருக்க விரும்புகிறது என்றும் குறிப்பிட்ட திருத்தந்தை, திருப்பயணிகள், சுற்றுலாப் பயணிகள், புலம்பெயர்ந்தோர், இக்கட்டான நிலையில் உள்ளவர்கள், ஏழைகள், தனிமையில் இருப்பவர்கள், நோயாளர்கள், கைதிகள், ஒதுக்கப்பட்டவர்கள் யாவரும் இந்த மனப்பான்மையின் உண்மையான சாட்சிகளாக இருக்கட்டும் என்றும் தெரிவித்தார்.

இதன்காரணமாகவே, தான் சிறையில் ஒரு புனித கதவை திறக்க முடிவு செய்ததாகவும், மேலும், அதிகாரம் என்பது அனைவருக்கும் சேவை செய்யவே என்று உணர்ந்து பணியாற்றும்போதும், ​​குடிமக்களின் மற்றும் குறிப்பாக, பாதிப்புக்குள்ளாகும் நபர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதன் சட்டப்பூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்தும் போதும், ​​அதிகாரம் முழுமையான உண்மைத்தன்மைக்கு இவை சாட்சியமளிக்கலாம் என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

இது அரசுப் பணியாளர்களாகிய உங்களுக்கு மட்டுமல்ல, கடவுளுடைய மக்களுக்குப்  பணியாற்றுவதற்கும் அவர்களுடன் ஒன்றிணைந்து பயணிப்பதற்கும், நெருக்கம் காட்டுவதற்கும் இது அருள்பணியாளர்களுக்கும், ஆயர்களுக்கும் உரியதும் கூட என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

ஆகவே, உலகின் தனித்தன்மையாக விளங்கும் உரோமை நகர், அதன் பல்வேறு பணிகளால் இத்தாலிய அரசுக்கும், திருஅவைக்கும், மற்றும் மனிதக் குடும்பத்திற்கும் உதவுவதில் அது சந்திக்கும் சவால்கள் மற்றும் பிரச்சனைகள் யாவும் அதன் வளர்ச்சிக்கான வாய்ப்புகளாகவே அமையும் என்றும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 June 2024, 15:43