தேடுதல்

Focolare அமைப்பின் பல்சமய மாநாட்டின் பங்கேற்பாளர்களைச் சந்திக்கும் திருத்தந்தை Focolare அமைப்பின் பல்சமய மாநாட்டின் பங்கேற்பாளர்களைச் சந்திக்கும் திருத்தந்தை   (Vatican Media)

தூய ஆவியே பல்சமய சந்திப்புக்கான பாதைகளைத் திறக்கிறார்!

மோதலையும் பிரிவினையையும் தூண்டும் நோக்கில் மதம் அடிக்கடி தவறாகப் பயன்படுத்தப்படும் இக்காலத்தில், உங்களின் சாட்சிய வாழ்வு, மகிழ்ச்சி மற்றும் ஆறுதலின் ஆதாரமாக அமைந்துள்ளது : திருத்தந்தை பிரான்சிஸ்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உண்மையில், சில வேளைகளில் வியப்புக்குரிய வகையில் தூய ஆவியானவர்தான் பல்சமய சந்திப்புக்கான பாதைகளைத் திறக்கிறார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 3, இத்திங்களன்று, Focolare அமைப்பின் பல்சமய மாநாட்டின் பங்கேற்பாளர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த உரையாடல் சந்திப்பு காலப்போக்கில் வளமைபெற்றதற்கு உங்களின் இருப்பே முக்கிய காரணம் என்றும் கூறினார்.

ஒருவருக்கொருவர்மீதான அன்பு, செவிமடுத்தல், நம்பிக்கை, விருந்தோம்பல் மற்றும் ஒருவரையொருவர் அறிந்துகொள்வதன் வழியாக வெளிப்படுத்தப்படும் கடவுளின் அன்பே இந்த அனுபவத்தின் அடித்தளமாக அமைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

காலப்போக்கில், ஏழைகளின் அழுகைக்கு ஒன்றாகப் பதிலளிக்க முயல்வதில் நட்பும் ஒத்துழைப்பும் வளர்ந்தன என்றும், இவை, படைப்பை கவனித்துக்கொள்வதில் மற்றும் அமைதியை ஏற்படுத்துவதிலும் பணியாற்றுகின்றன என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.

மேலும் பல்சமயங்களைச் சேர்ந்த இவர்களுடன் நாம் உரையாடலுக்கு அப்பாற்பட்டு, சகோதரர் சகோதரிகளாக இருப்பதை உணர்கிறோம் மற்றும் பன்முகத்தன்மையின் இணக்கமான உலகத்தின் கனவைப் பகிர்ந்து கொள்கிறோம் என்றும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 June 2024, 15:43