ஐரிஷ் பெருமடத்துத் தலைவர் புனித கொலம்பன், திருஅவையை வளப்படுத்தியவர்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஐரிஷ் துறவுப் பெருமடத்துத் தலைவரான புனித கொலம்பனின் மரபு, திருஅவை மற்றும் குடிமைச் சமூகத்தை வளப்படுத்தியுள்ளது என்று புகழாரம் சூட்டியுள்ளார் திருத்தத்தை பிரான்சிஸ்.
"கொலம்பன் தினம் 2024" கொண்டாட்டத்தை முன்னிட்டு, கொலம்பன் அமைப்புகளின் 25-வது அனைத்துலகக் கூட்டத்தின் பங்கேற்பாளர்களுக்கு ஜூன் 23, இஞ்ஞாயிறன்று அனுப்பிய செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக, நீங்கள் பெரிய ஐரிஷ் துறவுப் பெருமடத்துத் தலைவரின் பெயரில் ஒன்றுகூடி சந்தித்து வருகிறீர்கள் என்றும், புனித கொலம்பன் மற்றும் அவரது தோழர்களின் வாழ்விடமான ஐரோப்பாவில் ஆன்மிக மற்றும் கலாச்சார நட்பு வலையமைப்பை உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளீர்கள்" என்றும் கூறி வியப்பிலாழ்ந்த திருத்தந்தை, அவர்கள் அனைவரும் நன்மையின் முத்திரையை விட்டுச் சென்றுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
உங்களின் இந்த நினைவேந்தல் நிகழ்வு வெறுமனே ஒரு வரலாறு நிகழ்வு மட்டுமல்ல, மாறாக, புனித கொலம்பன் மற்றும் அவரது மரபு பற்றிய அறிவுத்திறனை, நமது காலத்தில் திருஅவை மற்றும் குடிமைச் சமூகம் இரண்டிற்கும் வளப்படுத்துவதற்கான ஆதாரமாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர்களைப் பாராட்டியுள்ளார் திருத்தந்தை.
அப்போதைய ஐரிஷ் துறவிகள், கிறிஸ்தவத்தின் முதல் பலன்கள் இழக்கப்படும் ஆபத்தில் இருந்த ஒரு கண்டத்தின் பெரிய பகுதிகளை மீண்டும் நற்செய்தி அறிவிப்பை பெறச் செய்த திருப்பயணிகளாகவும் மறைப்பணியாளர்களாகவும் மாறியதை நினைவு கூர்ந்த திருத்தந்தை, ஆன்மிகம், கற்றல் மற்றும் அறநெறிகள் துறைகளில் அவர்களின் சிறந்த பங்களிப்பையும் போற்றியுள்ளார்.
நமது காலத்தில் நற்செய்தி நூல்களிலிருந்து ஊட்டத்தைப் பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள திருத்தந்தை, தங்கள் நம்பிக்கை மற்றும் கலாச்சாரத்தை அவர்களின் வளமான பாரம்பரியங்களுக்கு ஆக்கப்பூர்வமான நம்பிக்கையுடன் வெளிப்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும் என்றும் விண்ணப்பித்துள்ளார்.
22-23 ஜூன், இத்தாலியின் பியாசென்சாவில், கொலம்பன் தனது கடைசி மடத்தை 614-இல் சிறிய நகரமான பாபியோவில் நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்