நமது செயல்பாடுகளுக்கு வலிமை அளிப்பது இறை உறவே!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இறைவனுடன் நமது உறவை வளர்ப்பது, நாம் மேற்கொள்ள விரும்பும் திட்டங்களை ஆதரிக்கும் திறன் கொண்ட வலுவான வேர்களைப் பெற உதவுகிறது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூன் 10. இத்திங்களன்று, தான் வெளியிட்டுள்ள குறுஞ்செய்தி ஒன்றில் இவ்வாறு பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் மேற்கொள்ள விரும்பும் திட்டங்கள் அனைத்திற்கும் வலிமை அளிப்பது இறைவனுடனான ஆழமான இறைநம்பிக்கை மட்டுமே என்ற அர்த்தத்தில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.
தற்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆங்கில டுவிட்டர் கணக்கில் 1 கோடியே 89 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பின்தொடர்கின்றனர். எல்லா மொழிகளையும் சேர்த்து மொத்தம் 5 கோடியே 30 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் அவரைப் பின்தொடர்கின்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்