ஒவ்வொரு கிறிஸ்தவரும் இயேசுவின் பிடப்பட்ட அப்பமாக மாற வேண்டும்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நாம் இறைவேண்டல் செய்யும்போது, கடவுள் நம்மை தனது கரங்களில் ஏந்தி ஆசீர்வதித்து, பின்னர் தனது திரு உடலைப் பிட்டு நமக்குக் கொடுக்கிறார் என்றும், இதன் காரணமாக, நாம் அனைவரின் பசியையும் போக்கி நம்மை திருப்திபடுத்திக்கொள்ளலாம் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூன் 4, இச்செவ்வாயன்று, தான் வெளியிட்ட குறுஞ்செய்தி ஒன்றில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் கரங்களில் ஒவ்வொரு கிறிஸ்தவரும் இயேசுவின் பிடப்பட்ட அப்பமாக மாற்றப்பட்டு பிறருக்காகப் பகிர்ந்தளிக்கப்பட அழைக்கப்படுகிறார் என்றும் உரைத்துள்ளார்.
ஜூன் 2, இஞ்ஞாயிறன்று, இயேசுவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழா திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட வேளை, தனது மறையுரையில், கடவுள் நம்மைக் கைவிடுவதில்லை, ஆனால் எப்போதும் நம்மைத் தேடுகிறார், நமக்காகக் காத்திருக்கிறார், ஆதரவற்றவர்களாக நம்மை அவரது கரங்களில் ஒப்படைக்கும் நிலையிலும் கூட அவர் நமக்குத் துணையாக நிற்கிறார் என்று கூறியது நினைவுகூரத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்