விசுவாச ஊனங்களை குணப்படுத்துகிறது திருவிவிலியம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
ஊனமாகிப் போயுள்ள நம் விசுவாசத்தை திருவிவிலியம் குணப்படுத்துகிறது என ஜூன் 25, செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடவுள் நமக்கு ஆற்றியுள்ள வியத்தகுச் செயல்களை நமக்கு மீண்டும் எடுத்துரைத்து, கிறிஸ்தவ வாழ்வின் உண்மை அர்த்தமாக இருக்கும் இறைவனுடன் ஆன அன்புறவை புதிதாக சுவைக்க வைத்து நம் விசுவாச ஊனங்களை குணப்படுத்துகிறது திருவிவிலியம் என்கிறது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் குறுஞ்செய்தி.
இறைவார்த்தை என்ற ஹேஷ்டாக்குடன் வெளியிடப்பட்டுள்ள இந்த குறுஞ்செய்தி, திருத்தந்தையரின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள 5496வது ஆங்கில குறுஞ்செய்தியாகும்.
2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களால் துவக்கப்பட்ட டுவிட்டர் பக்கத்தின் ஆங்கிலப் பகுதியை இதுவரை ஏறக்குறைய 1 கோடியே 85 இலட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்