தேடுதல்

ஹங்கேரியில் திருத்தந்தை (கோப்பு படம்) ஹங்கேரியில் திருத்தந்தை (கோப்பு படம்) 

திருத்தந்தையின் லக்ஸம்பர்க், பெல்ஜியம் பயண விவரங்கள்

ஒரு நாள் லக்ஸம்பர்க்கிலும், இரண்டரை நாட்கள் பெல்ஜியத்திலும் திருத்தூதுப்பயணம் மேற்கொள்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

செப்டம்பர் மாதம் 26 முதல் 29 வரை லக்ஸம்பர்க் மற்றும் பெல்ஜியம் நாடுகளில் திருத்தந்தை மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணங்கள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது திருப்பீட தகவல் தொடர்புத்துறை.

செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி வியாழனன்று காலை உள்ளூர் நேரம் 8 மணி 5 நிமிடங்களுக்கு உரோம் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்படும் திருத்தந்தை 10 மணிக்கு லக்ஸம்பர்கின் Findel பன்னாட்டு விமான நிலையம் வந்தடைந்து முதலில் மன்னர் வழி வந்த அந்நாட்டுத் தலைவரைச் சந்தித்து உரையாடுவார்.

அதன் பின்னர் பிரதமர், அரசியல் தலைவர்கள், சமூகத் தலைவர்கள், அரசுத் தூதுவர்கள் ஆகியோரைச் சந்தித்தபின், மாலையில் அந்நாட்டு கத்தோலிக்க சமூதாயத்தை சந்தித்து உரையாடியபின்னர், அன்றே ல்க்ஸம்பர்க்கிலிருந்து விடைபெற்று பெல்ஜியம் நாட்டின் Brussels நகருக்கு விமானம் மூலம் வந்தடைவார்.

27ஆம் தேதி காலையில் பெல்ஜியம் மன்னரை  சந்தித்தபின் பிரதமர், அரசு அதிகாரிகள், சமூகத் தலைவர்கள் ஆகியோரை சந்திப்பார்.

அன்று மாலையில் பல்கலைக்கழக பேராசிரியர்களுடனான திருத்தந்தையின் சந்திப்பு இடம்பெறும்.

செப்டம்பர் 28ஆம் தேதி காலையில், பெல்ஜியம் ஆயர்கள், அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், துறவியர், குருமட மாணவர்கள் மற்றும் மேய்ப்புப் பணியாளர்களைச் சந்தித்து உரை வழங்கியபின், பல்கலைக்கழக மாணவர்களையும், பின்னர் அங்குள்ள இயேசு சபை அங்கத்தினர்களையும் சந்தித்து உரையாடுவார்.          

29ஆம் தேதி ஞாயிறன்று காலை விசுவாசிகளுக்கு திருப்பலி நிறைவேற்றுவதுடன், நண்பகல் 12.45 மணிக்கு உரோம் நகர் நோக்கிய பயணத்தைத் துவக்கி 2 மணி நேரம் 10 நிமிடங்கள் பயணம் செய்து உரோம் நகர் வந்தடைவார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 July 2024, 15:53