தேடுதல்

திருத்தந்தையுடன் கர்தினால் Jean Marc Aveline (கோப்புப்படம்) திருத்தந்தையுடன் கர்தினால் Jean Marc Aveline (கோப்புப்படம்)  (Vatican Media)

Quebec பெருநகர உயர்மறைமாவட்டம் உருவானதன் 350 ஆண்டுவிழா

1674 ஆம் ஆண்டு கனடாவின் கியூபெக் புதிய மறைமாவட்டமாக உருவானது. இம்மறைமாவட்டத்தின் முதல் ஆயராக புனித பிரான்சுவா டி லாவல் அவர்கள் பணியாற்றினார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

கனடாவின் Quebec பெருநகர உயர்மறைமாவட்டம் உருவானதன் 350 ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களில் பங்கேற்க Marseille பெருநகர உயர்மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால் Jean-Marc Aveline அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூலை 20 சனிக்கிழமை வெளியிடப்பட்ட தகவல்களின்படி வருகின்ற செப்டம்பர் 20 முதல் 22 வரை கனடாவின் கியூபெக் உயர் மாறைமாவட்டத்தில் நடைபெற உள்ள 350 ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களில் பங்கேற்க கர்தினால் Jean-Marc Aveline அவர்கள் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளார்.

1674 ஆம் ஆண்டு கனடாவின் கியூபெக் புதிய மறைமாவட்டமாக உருவானது. இம்மறைமாவட்டத்தின் முதல் ஆயராக புனித பிரான்சுவா டி லாவல் அவர்கள் பணியாற்றினார்.

பிரெஞ்சு நாட்டுக்காரரான புனித பிரான்சுவா டி லாவல் அவர்கள் தனது வாழ்வின் 30 ஆண்டுகள் வட அமெரிக்காவின் பிரெஞ்சு காலனித்துவப் பகுதிகளில் நற்செய்தியைப் பறைசாற்றினார். 2014ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவருக்குப் புனிதர் பட்டமளித்தார்.  

பெருநகர உயர் மறைமாவட்டத்தின் 350வது ஆண்டு விழா கொண்டாட்டமானது கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் நாள் ஆடம்பர திறப்பு விழாவானது புனித கதவு திறந்து தொடங்கப்பட்டது.

350,000 கிமீ2 பரப்பளவைக் கொண்டுள்ள கியூபெக் பெருநகர உயர் மறைமாவட்டமானது 12 இலட்சம் மக்களைக் கொண்டுள்ளது, அவர்களில் 80விழுக்காட்டினர் கத்தோலிக்கர்கள் ஆவர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 July 2024, 14:16