தேடுதல்

தஞ்சாவூர் மறைமாவட்ட புதிய ஆயர் அருள்பணி. சகாயராஜ் தம்புராஜ் தஞ்சாவூர் மறைமாவட்ட புதிய ஆயர் அருள்பணி. சகாயராஜ் தம்புராஜ்  

தஞ்சாவூர் மறைமாவட்ட புதிய ஆயராக அருள்பணி. சகாயராஜ் தம்புராஜ்

அருள்பணி த. சகாயராஜ் அவர்கள் திருச்சிராப்பள்ளி மறைமாவட்டத்தில் உள்ள அய்யம்பட்டியில் 1969ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் நாள் பிறந்தார். சென்னை பூவிருந்தவல்லி திருஇருதய குருத்துவக் கல்லூரியில் தத்துவம் மற்றும் இறையியல் பயின்ற இவர் 1996ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் நாள் அருள்பணியாளராக திருப்பொழிவு பெற்றார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயராக அருள்பணி சகாயராஜ் தம்புராஜ் அவர்களை ஜூலை 13 சனிக்கிழமை நியமனம் செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அருள்பணி த. சகாயராஜ் அவர்கள் திருச்சிராப்பள்ளி மறைமாவட்டத்தில் உள்ள அய்யம்பட்டியில் 1969ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் நாள் பிறந்தார். சென்னை பூவிருந்தவல்லி திருஇருதய குருத்துவக் கல்லூரியில் தத்துவம் மற்றும் இறையியல் பயின்ற இவர் 1996ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் நாள் அருள்பணியாளராக திருப்பொழிவு பெற்றார்.  ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகத்திலும், முதுகலைப்பட்டத்தை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும் பயின்றார். தத்துவஇயலில் முனைவர் பட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகத்தில் பெற்ற இவர் தற்போது திருச்சி புனித பவுல் குருத்துவக் கல்லூரியின் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்.

புதிய ஆயர் ஆற்றியுள்ள பணிகள்

திருச்சி புனித அன்னை மரியா பேராலயத்தின் உதவிப் பங்குத்தந்தை (1996-1997), மரியநாதபுரம் பங்குத்தந்தை (1997-2004), மறைமாவட்ட குருக்கள் செனட்டின் செயலர் (2001-2007), மேய்ப்புப்பணி நிலையத்தின் இயக்குநர் மற்றும் மறைமாவட்ட ஆணையங்களின் ஒருங்கிணைப்பாளர் (2007-2012), மணப்பாறை பங்குத்தந்தை (2012), அன்னை மரியா பேராலயத்தின் அதிபர் மற்றும் பங்குத்தந்தை, சென்னை, திருச்சிராப்பள்ளி குருத்துவக் கல்லூரிகளில் (External Professor) பேராசிரியர் (2017-2023),  திருச்சி புனித பவுல் குருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் (2023) என பல பணிகளைத் திறம்பட ஆற்றியவர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 July 2024, 11:51