தேடுதல்

பாரிசில் கோடை ஒலிம்பிக் இடம்பெற உள்ளது. பாரிசில் கோடை ஒலிம்பிக் இடம்பெற உள்ளது.  (AFP or licensors)

கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்கு திருத்தந்தையின் செய்தி

விளையாட்டுக்கள் மனிதனின் நன்மதிப்பையும் இணக்கவாழ்வையும் ஊக்குவிப்பதாக இருக்கட்டும். அமைதியையும் நட்புணர்வையும் நோக்கி இவ்வுலகை இட்டுச் செல்லட்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிசில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறுவதற்கு முன்னோடியாக அங்கு இடம்பெற்ற அமைதிக்கான திருப்பலிக்கு தன் செய்தியை வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வாண்டின் கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மனிதனின் நன்மதிப்பையும் இணக்கவாழ்வையும் ஊக்குவிப்பதாக இருக்கட்டும் என தன் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகள் அமைதியையும் நட்புணர்வையும் நோக்கி இவ்வுலகை இட்டுச்செல்லட்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.

ஜூலை மாதம் 26 முதல் ஆகஸ்ட் 11 வரை இடம்பெற உள்ள கோடைகால ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஊக்கமளிக்கும் நோக்கத்தில் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை பாரிசில் அமைதிக்கான திருப்பலி நிறைவேற்றப்பட்டதையொட்டி தன் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறுவோர், பார்வையாளர்கள் மற்றும் இதனை ஏற்று நடத்தும் பாரிஸ் நகர் மக்கள் என அனைவருக்கும் தன் வாழ்த்துக்களை இந்த செய்தியில் விடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் செப உறுதியையும் அதில் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 July 2024, 15:49