தேடுதல்

போரினால் துன்புறும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் மரியா

கடல் ஞாயிறு அன்று கடல் துறையில் பணிபுரிபவர்களுக்காகவும், அவர்களைப் பராமரித்துப் பாதுகாப்பவர்களுக்காகவும் சிறப்பாக செபிப்போம்

மெரினா ராஜ் - வத்திக்கான்

கடவுளின் தாயான புனித கார்மேல் அன்னை போரின் துயரத்தால் ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் ஆறுதல் அளித்து அமைதியை அளிக்கட்டும் என்றும், போரினால் துன்புறும் மக்கள் அனைவருக்காகவும் செபிக்க மறக்க வேண்டாம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூலை 14 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் வளாகத்தில் திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில் அளித்த செப விண்ணப்பங்களின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஜூலை 16 திருஅவையில் கொண்டாடப்பட இருக்கும் தூய கார்மேல் அன்னை திருவிழாவையும் நினைவுகூர்ந்தார்.

கடல் ஞாயிறு அன்று கடல் துறையில் பணிபுரிபவர்களுக்காகவும், அவர்களைப் பராமரித்துப் பாதுகாப்பவர்களுக்காகவும் சிறப்பாக செபிப்போம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், போரினால் துன்புறும் உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரயேல், மியான்மார் பகுதி மக்களுக்காக செபியுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.

உரோம், இத்தாலி மற்றும் உலகின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய அகுஸ்தீன் சபை, நாசரேத் திருக்குடும்ப சகோதரிகள் சபையினரின் பொதுப்பேரவையில் பங்கேற்கும் உறுப்பினர்கள் அனைவரையும் வாழ்த்தினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 July 2024, 13:07