தேடுதல்

ஜப்பானின் ஹிரோஷிமா நகரில்  உலகின் முக்கிய மதங்களின் தலைவர்கள் ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் உலகின் முக்கிய மதங்களின் தலைவர்கள் 

எந்த இயந்திரமும் மனிதரின் உயிரைப் பறிக்கக் கூடாது!

திருத்தந்தை வழங்கியுள்ள இந்தச் செய்தியில், செயற்கை நுண்ணறிவு குறித்தும், இயந்திரங்களின் ஆளுமை, அவற்றைத் தேர்வு செய்வதில் மனிதரின் சுதந்திரமான முடிவெடுக்கும் திறன் குறித்தும் விளக்கியுள்ள அதேவேளை, மனித மாண்பு குறித்தும், அவற்றைப் போற்றி பாதுகாப்பதன் வழிமுறைகள் குறித்தும் திறம்பட விளக்கியுள்ளார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நமக்கு முன்னால் உள்ள பிரச்சனைகளின் சிக்கலான தன்மையைப் பார்க்கும்போது, ​​செயற்கை நுண்ணறிவை ஒழுங்குபடுத்துவதில் மக்கள் மற்றும் மதங்களின் கலாச்சார வளங்களின் பங்களிப்பை அங்கீகரிப்பது, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் அறிவார்ந்த மேலாண்மைக்கான உங்கள் உறுதிப்பாட்டின் வெற்றிக்கு முக்கியமாகும் என்று அறிவுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஜூலை 8, 9 ஆகிய தேதிகளில் ஜப்பானின் ஹிரோஷிமா நகரில்  'செயற்கை நுண்ணறிவு அமைதிக்கான நெறிமுறைகள்' என்ற தலைப்பில் உலகின் முக்கிய மதங்களின் தலைவர்கள் ஒன்று கூடி கலந்துரையாடி வரும் உலக மன்றத்திற்கு வழங்கியுள்ள செய்தியில் இவ்வாறு உரைத்துள்ளார் திருத்தந்தை.

செயற்கை நுண்ணறிவும் அமைதியும் மிக முக்கியமான இரண்டு விடயங்கள் என்று கூறியுள்ள திருத்தந்தை, "ஓர் இயந்திரம் என்பது, சில வழிகளிலும் இந்தப் புதிய முறைகளிலும், வழிமுறைத் தேர்வுகளை உருவாக்க முடியும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்று, அண்மையில் இடம்பெற்ற G7 உச்சிமாநாட்டின் அரசியல் தலைவர்களுக்கு வலியுறுத்தியதை இச்செய்தியில் நினைவுகூர்ந்துள்ளார்.

மனிதர் இதயங்களில் தீர்மானிக்கும் திறன் கொண்டவரகள்

ஓர் இயந்திரம் என்பது  நன்கு வரையறுக்கப்பட்ட அளவுகோல் அல்லது புள்ளிவிவர அனுமானங்களின் அடிப்படையில் பல சாத்தியக்கூறுகளில் ஒரு தொழில்நுட்ப தேர்வை செய்கிறது என்று எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இருப்பினும், மனிதர்கள் தேர்வு செய்வது மட்டுமல்லாமல், அவர்களின் இதயங்களில் தீர்மானிக்கும் திறன் கொண்டவர்கள் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு முடிவு என்பது ஒரு தேர்வின் செயல்நெறிமுறை உறுப்பு என்று நாம் அழைக்கலாம், மற்றும், இது நடைமுறை மதிப்பீட்டைக் கோருகிறது என்று செயற்கை நுண்ணறிவு குறித்துத் தெளிவுபடுத்தியுள்ளார் திருத்தந்தை.

சில வேளைகளில், ஆளும் கடினமான பணிக்கு மத்தியில், பலருக்கு விளைவுகளை ஏற்படுத்தும் முடிவுகளை எடுக்க நாம் அழைக்கப்படுகிறோம் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இது சம்பந்தமாகப் பார்க்கும்போது, மனித பிரதிபலிப்பு, எப்பொழுதும் ஞானம், கிரேக்க தத்துவத்தின் ஃபிரோனிசிஸ் (நடைமுறைச் செயலுடன் தொடர்புடைய ஒரு வகையான ஞானம் அல்லது அறிவாற்றல்) மற்றும், குறைந்தபட்சம், புனித நூலின் ஞானம் பற்றி பேசுகிறது என்றும் விளக்கியுள்ளார்.

முடிவெடுக்கும் திறன் மனிதரிடம் விடப்பட வேண்டும்

இயந்திரங்களின் அதிசயிக்கத்தக்க செயல்களை நாம் எதிர்கொள்ளும்போது, ​​​​சுதந்திரமாகத் தேர்ந்தெடுப்பது எப்படி என்று தோன்றுகிறது என்று உரைத்துள்ள திருத்தந்தை, முடிவெடுப்பது என்பது, அதன் சில வேளைகளில் வியத்தகு மற்றும் அவசர அம்சங்களை எதிர்கொண்டாலும், எப்போதும் அது மனித நபரிடம் விடப்பட வேண்டும் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இயந்திரங்களின் தேர்வுகளை நம்பியிருப்பதன் வழியாக, தங்களைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கையைப் பற்றியும் முடிவெடுக்கும் மக்களின் திறனைப் பறித்தால், நம்பிக்கையற்ற எதிர்காலத்திற்கு மனிதகுலத்தை நாம் கண்டனம் செய்வோம்.

இயந்திரங்களின் விருப்பங்களைச் சார்ந்து மக்களை அழிவுக்கு உள்ளாக்குவதன் வழியாக, தங்களைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கையைப் பற்றியும் முடிவெடுக்கும் மக்களின் திறனை நாம் பறித்தால், நம்பிக்கை இல்லாத எதிர்காலத்திற்கு மனிதகுலம் தள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளார் திருத்தந்தை.

மனிதமாண்பு பாதுகாக்கப்பட வேண்டும்

செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களால் செய்யப்படும் தேர்வுகளின் மீது சரியான மனிதக் கட்டுப்பாட்டிற்கான இடத்தை நாம் உறுதிசெய்து பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏனெனில் மனித மாண்பு தன்னிலேயே அதைச் சார்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உங்களின் இந்தத் தொடக்க முயற்சியைப் பெரிதும் பாராட்டுகிறேன் என்று கூறியுள்ள திருத்தந்தை, இயந்திரங்களின் இந்தப் புதிய சகாப்தத்தில் மனித மாண்பைப் பாதுகாக்க ஒரு செயலூக்கமான அர்ப்பணிப்பைக் கோருவதில் நாம் ஒன்றுபட்டுள்ளோம் என்பதை உலகுக்குக் காட்டும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்றும் விண்ணப்பித்துள்ளார்.

ஆயுதங்களின் ஆதிக்கத்தைத் தடை செய்வோம்

உலகில் ஆயுதமோதல்கள் நிகழ்ந்துவரும் இந்தச் சோகமான தருணத்தில், 'கொடிய தன்னாட்சி ஆயுதங்கள்' என்று அழைக்கப்படும் சாதனங்களின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டை மறுபரிசீலனை செய்வது அவசரமானது என்பதை சகோதரர் சகோதரிகளாக ஒன்றிணைந்து, உலகிற்கு நினைவூட்டுவது மிகவும் முக்கியமானது என்றும், அவற்றின் பயன்பாட்டைத் தடை செய்யுங்கள் என்றும் இம்மன்றத்தின் பங்கேற்பாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை.

மேலும் இந்த முயற்சி என்பது, இன்னும் பெரிய மற்றும் சரியான மனிதக் கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்துவதற்கான பயனுள்ள மற்றும் உறுதியான அர்ப்பணிப்பிலிருந்து தொடங்குகிறது என்று உரைத்துள்ள திருத்தந்தை, எந்த இயந்திரமும் மனிதரின் உயிரைப் பறிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 July 2024, 14:25