தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

மோதல்களைத் தவிர்த்து நல்லிணக்கத்தை மீட்டெடுப்போம்!

ஒலிம்பிக் கால அமைதியின்போது அதிகாரத்தில் இருப்பவர்களின் மனசாட்சியை கடவுள் தெளிவுபடுத்தட்டும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உலக அமைதி கடுமையாக அச்சுறுத்தப்பட்டுள்ள இவ்வேளையில், மோதல்களைத் தீர்த்து நல்லிணக்கத்தை மீட்டெடுக்கும் நம்பிக்கையில், ஒலிம்பிக் கால அமைதியை அனைவரும் மதிப்பார்கள் என்று நான் ஆவலுடன் நம்புகிறேன் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஜூலை 25, இவ்வியாழனன்று 'பாரிஸ் 2024' என்ற ஹாஸ்டாக்குடன் வழங்கியுள்ள குறுஞ்செய்தியில் இவ்வாறு நம்பிக்கை தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒலிம்பிக் கால அமைதியின்போது அதிகாரத்தில் இருப்பவர்களின் மனசாட்சியை கடவுள் தெளிவுபடுத்தட்டும் என்றும் உரைத்துள்ளார்.  

ஒலிம்பிக் கால அமைதிக்கான பாரம்பரியம் என்பது பண்டைய கிரேக்கத்தில் கிமு 9-ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது. அனைத்துலக ஒலிம்பிக் அமைப்பு (IOC) பொதுவாக விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டின் நலன்களைப் பாதுகாப்பதற்காக இந்தப் பண்டைய கருத்தை புதுப்பிக்க முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது

Olympic truce அதாவது போர்நிறுத்தம் என்பது ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னும் பின்னும் ஒரு "சண்டை நிறுத்தம்" அறிவிப்பதைக் குறிக்கிறது. ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்தும் நகரம் தாக்கப்படாமல் இருப்பதையும், விளையாட்டு வீரர்களும் பார்வையாளர்களும் பாதுகாப்பாக விளையாட்டுகளுக்குச் சென்று அமைதியாக அந்தந்த நாடுகளுக்குத் திரும்பலாம் என்பதையும் உறுதிசெய்கிறது இப்போர்நிறுத்தம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 July 2024, 12:42