குழந்தை பிறப்பு அல்ல, சுயநலமே நமது உலக பிரச்சனைக்குக் காரணம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நமது உலகின் பிரச்சனை என்பது அதில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை அல்ல, மாறாக சுயநலம், நுகர்வோர் மற்றும் தனிமனிதவாதம்தான் அப்பிரச்சனைக்குக் காரணம் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூலை 11, இவ்வியாழனன்று உலக மக்கள்தொகை நாள் சிறப்பிக்கப்படும் வேளை, தனது டுவிட்டர் செய்தியில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுயநலம், நுகர்வோர் மற்றும் தனிமனிதவாதம்தான் மக்களைத் திருப்தியடையவும், தனிமையடையவும், மகிழ்ச்சியற்றதாகவும் ஆக்குகிறது என்று கவலை தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் உலக மக்கள் தொகை நாள் ஆண்டுதோறும் ஜூலை 11-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
ஜூலை 10, 2024 புதன்கிழமை நிலவரப்படி தற்போதைய உலக மக்கள் தொகை 812, 5,08, 228. இதே நாள் கணக்குப்படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 1,442,017,450.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்