தேடுதல்

புத்தகத்தின் அட்டைப்படம் புத்தகத்தின் அட்டைப்படம் 

திருத்தந்தையின் உரைகளடங்கிய “ஜனநாயகத்தின் இதயத்தில்” புத்தக வெளியீடு

வத்திக்கான் பத்திப்பகம் மற்றும் இல் பிக்கோலோ பத்திரிக்கை ஆகியோரால் தொகுக்கப்பட்ட திருத்தந்தையின் உரைகளடங்கிய இப்புத்தகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தொடக்க உரையும், இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் மத்தேயு ஷூப்பி அவர்களின் அறிமுக உரையும் இடம்பெற்றுள்ளது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உரைகளை உள்ளடக்கிய புத்தகமானது ஜனநாயகத்தின் இதயத்தில் என்ற தலைப்பில் ஜூலை 7 ஞாயிற்றுக்கிழமையன்று வடக்கு இத்தாலியின் Trieste நகரில் வெளியிடப்பட இருக்கின்றது.

ஜூலை 3 முதல் 7 வரை வடக்கு இத்தாலியின் Trieste நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இத்தாலியின் ஐம்பதாவது கத்தோலிக்க வாரத்தின் நிறைவில் பங்கேற்பதற்காக அந்நகருக்கு திருத்தந்தை செல்ல இருப்பதையொட்டி இப்புத்தகமானது வெளியிடப்பட்டு, இலவசமாக மக்களுக்கு கொடுக்கப்பட இருக்கின்றது.

வத்திக்கான் பத்திப்பகம், இல் பிக்கோலோ பத்திரிக்கை ஆகியோரால் தொகுக்கப்பட்ட  திருத்தந்தையின் உரைகளடங்கிய இப்புத்தகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஜனநாயகம் ஒன்றிணைந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கின்றது என்ற கருத்துக்களை உள்ளடக்கிய தொடக்க உரையும், இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் மத்தேயு ஷூப்பி அவர்களின் அறிமுக உரையும் இடம்பெற்றுள்ளது.  

திருத்தந்தையின் தொடக்க உரையில் ஜனநாயகம் என்பது பண்டைய கிரேக்கத்தில் மக்களை ஆளும் தலைவர்களால் பயன்படுத்தப்படும் அதிகாரத்தைக் குறிக்கும் சொல்லாக அறியப்பட்டது என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மைய ஆண்டுகளில் உலகளாவிய ரீதியில் பரவியுள்ள அரசாங்கத்தின் வடிவமானது, தற்காலத்தின் சிக்கல்களை எடுத்துக்கொள்வதில் சிரமம், வேலையின்மை தொடர்பான சிக்கல்கள் அல்லது அதிக சக்தி வாய்ந்த தொழில்நுட்ப முன்னுதாரணத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பல்வேறு கலாச்சாரங்கள், மதங்கள் மற்றும் இனக்குழுக்கள் இணைந்திருப்பதன் காரணமாக, வலுவான மத்திய ஐரோப்பிய சுவை கொண்ட நகரமான Trieste விற்கு தான் மேற்கொள்ள இருக்கும் ஒரு நாள் பயணம் பற்றியும் அவ்வுரையில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜனநாயகத்தின் இதயத்தில், வரலாறு மற்றும் எதிர்காலத்திற்கு இடையே பங்கேற்றல் என்னும் தலைப்பில் இவ்வாண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் 50ஆவது கத்தோலிக்க வாரம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 July 2024, 11:38