தேடுதல்

பேராசிரியர் ஏலேனா பெக்காலி திருத்தந்தையுடன் பேராசிரியர் ஏலேனா பெக்காலி திருத்தந்தையுடன்   (VATICAN MEDIA Divisione Foto)

திருத்தந்தையைச் சந்தித்தத் திருச்சிலுவைக் கல்லூரியின் அதிபர்

பேராசிரியர் ஏலெனா அவர்கள் திருத்தந்தையுடனான தனிப்பட்ட இச்சந்திப்பின்போது, பல்கலைக்கழகம், உலகம், கல்வி போன்ற பல தலைப்புக்களில் உரையாடினார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

கத்தோலிக்கப் பல்கலைக்கழகமானது, தூய ஆவியின் ஆற்றலினால் அறிவொளிபெற்று உண்மையைத்தேடும் பணியில் தன்னை இணைத்துள்ளது என்றும், உலகக் கண்ணோட்டத்தில் எல்லைப் பிரச்சனைகள் பற்றிய சிந்தனையின் பங்களிப்பை முன்மொழிவதற்காக இத்தாலியின் 5 பகுதிகளில் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது என்றும் தெரிவித்தார் பேராசிரியர் ஏலேனா பெக்காலி.

ஆகஸ்ட் 12 திங்கள்கிழமை வத்திக்கானில் தூய திருச்சிலுவை கத்தோலிக்க கல்லூரியின் அதிபர்  பேராசிரியர் ஏலேனா பெக்காலி அவர்களை சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் இக்கல்லூரியின் அதிபராகப் பொறுப்பேற்றிருக்கும் பேராசிரியர் ஏலெனா அவர்கள் திருத்தந்தையுடனான தனிப்பட்ட இச்சந்திப்பின்போது, பல்கலைக்கழகம், உலகம், கல்வி போன்ற பல தலைப்புக்களில் உரையாடினார்.

கத்தோலிக்கப் பல்கலைக்கழகமானது, தூய ஆவியின் ஆற்றலினால் அறிவொளிபெற்று உண்மையைத்தேடும் பணியில் தன்னை இணைத்துள்ளது என்றும், உலகக் கண்ணோட்டத்தில் எல்லைப் பிரச்சனைகள் பற்றிய சிந்தனையின் பங்களிப்பை முன்மொழிவதற்காக, மிலான், ஃப்ரெசியா, பியாசென்சா, கிரெமோனா, உரோம் ஆகிய ஐந்து பகுதிகளில் திட்டத்தை கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் செயல்படுத்த முன்வந்துள்ளது பற்றியும் எடுத்துரைத்தார்.

உலகளாவிய திருஅவையின் பணியை அடிப்படையாகக் கொண்ட கத்தோலிக்க பல்கலைக்கழகத்துடன் தொடர்ந்து நெருக்கமாக இருப்பததற்காத்க திருத்தந்தைக்குத் தனது ஆழ்ந்த நன்றியினைத் தெரிவித்த பேராசிரியர் பெக்காலி அவர்கள், தொடர்ந்து புதுப்பித்து, தீவிரமான மாற்றம், எதார்த்தத்திற்குள் ஒருங்கிணைந்த பல்கலைக்கழக உருவாக்கம் போன்றவற்றில் புதிய தலைமுறைகளுக்கு துணையாகவும் ஆதரவளிக்கவும் இருக்க உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 August 2024, 11:52