தேடுதல்

ITALY-POPE ITALY-POPE  (AFP or licensors)

அமைதியின் நற்செய்தியை அறிவிக்க அனைவரும் அழைக்கப்படுகிறோம்!

இது ரிமினி மற்றும் பிற நகரங்களில் ஒவ்வொரு மாதமும் 20-ஆம் தேதி நடைபெறும் இறைவேண்டல் முயற்சியாகும். ஆகஸ்ட் 20 அன்று ரிமினியின் ஆயர் நிகோலோ அன்செல்மி அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொள்கிறார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

எல்லா மனித இனத்திற்கும், முன்னெப்போதையும் விட இன்று, அமைதியின் நற்செய்தி அதிகம் தேவைப்படுகிறது என்றும், ஒவ்வொரு கிறிஸ்தவரும் இந்த அமைதியின் நற்செய்தியை அறிவிக்கவும் பகிர்ந்து கொள்ளவும் அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் கடிதம் ஒன்றில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலக அமைதிக்காக 'ரிமினியில் உள்ள சதுக்கத்தில் பத்தாம் ஆண்டு செபமாலை நிகழ்வை நடத்தும் 'துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கான நாசரேத் அமைப்பு ஒன்றுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

அன்பான பிறரன்புப் பணிகள், நெருக்கம் மற்றும் குறிப்பாக அநீதி, அடக்குமுறை, வெறுப்பு மற்றும் பேராசை ஆகியவற்றால் காயமடைந்த மக்களின் வலியுடன் ஒன்றிணைந்ததற்கான உங்கள் சாட்சியத்திற்கு நன்றி என்று உரைத்துள்ளார் திருத்தந்தை.

இந்நிகழ்வில் பங்குபெறும் அனைவரும், இறைவேண்டலின் தருணங்களில், ஆர்வமிகுந்த இதயங்களுடன் அனைவருக்கும் மரியாதை, வரவேற்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய உடன்பிறந்த உறவுக்கான கலாச்சாரத்தை ஊக்குவிப்பவர்களாக இருப்பார்கள் என நான் நம்புகிறேன் என்றும், இங்குதான் ஒன்றிப்பின் அப்பத்தையும் மகிழ்ச்சியையும் காண முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

அன்னை கன்னி மரியாவின் உதவியை நாடுமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்று அறிவுறுத்தியுள்ள திருத்தந்தை, அமைதியும் நல்லிணக்கமும் நிறைந்த எதிர்காலத்தை எதிர்நோக்கத் துணிவதற்கான நம்பிக்கையின் ஒளியை நம் ஆன்மாக்களில் ஏற்றி வைப்பவராக அவர் இருக்கட்டும் என்று உரைத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 August 2024, 12:57