தேடுதல்

'திருப்பயணிகளின் அன்னை'  திருவுருவத்தின் முன்பு இறைவேண்டல் செய்யும் திருத்தந்தை 'திருப்பயணிகளின் அன்னை' திருவுருவத்தின் முன்பு இறைவேண்டல் செய்யும் திருத்தந்தை   (ANSA)

புனித மோனிகாவிற்கு அஞ்சலி செலுத்தினார் திருத்தந்தை!

புனித அகுஸ்தினாரின் அன்னையான புனித மோனிகா பல நூற்றாண்டுகளாக ஒரு துறவியாகப் போற்றப்பட்டு, இன்றைய வழிபாட்டு முறைகளில் நினைவுகூரப்படுகிறார்.

செல்வராஜ் சூசைமாணிக்ககம் - வத்திக்கான்

ஆகஸ்ட் 27, இச்செவ்வாயன்று, திருஅவை புனித மோனிகாவின் விழாவை சிறப்பித்த வேளை, உரோமையின் மையப்பகுதியிலுள்ள புனித ஆகுஸ்தினாரின் கோவிலுக்கு ஒரு சிறப்புப் பயணத்தை மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்புனிதைக்கு சிறப்பு வணக்கமும் அஞ்சலியும் செலுத்தினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித அகுஸ்தினார் கோவிலுக்குப் பயணம் மேற்கொண்டதையும், அங்கு அவர் இடைநின்று சிறிதுநேரம் இறைவேண்டலில் ஈடுபட்டதையும் தெரிவித்துள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.

மேலும் அதே கோவிலின் கவல்லெத்தி சிற்றாலயத்தில் உள்ள கரவாஜியோவின் ஓவியமான 'திருப்பயணிகளின் அன்னை'  திருவுருவத்தின் முன்பும் சிறிதுநேரம் செபத்தில் ஈடுபட்டிருந்தார் திருந்தந்தை என்றும் அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இறுதியாக அங்கிருந்து வத்திக்கானுக்குத் திரும்பும் முன்னர், அங்கிருந்த துறவு சபையைச் சார்ந்த அருள்தந்தையர்கள், அருள்சகோதரிகள், திருப்பயணிகள் அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார் திருந்தந்தை என்று மேலும் உரைக்கிறது அச்செய்திக் குறிப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 August 2024, 13:37