தேடுதல்

RECOR எனப்படும் அமைப்புசார் சமூகங்களின் குழுவினருடன் திருத்தந்தை  RECOR எனப்படும் அமைப்புசார் சமூகங்களின் குழுவினருடன் திருத்தந்தை  

அமெரிக்க அமைப்புசார் சமூகங்களின் தலைவர்களை சந்தித்தார் திருத்தந்தை!

இந்த வலைப்பின்னல் அமைப்பானது, அவர்களின் கத்தோலிக்க ஆயர்களுடன் இணைந்து, நற்செய்தியால் சுவைக்கப்பட்ட வாழ்க்கை முறையை உறுதி செய்யும் குறிக்கோளுடன், திருஅவையின் சமூகக் கோட்பாட்டைச் செயல்படுத்துவதில் முன்னணியில் ஈடுபடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மக்கள் வாழ்வதற்கு ஒன்றிணைந்த பயணத்திற்கான உறவு பாலம் ஒன்றைக் கட்டியெழுப்புமாறு அமெரிக்க அமைப்புசார் சமூகங்களின் தலைவர்களை சந்தித்தபோது ஊக்குவித்தார் திருதந்தை பிரான்சிஸ்

ஆகஸ்ட் 28, இப்புதன் மாலை, தனது சாந்தா மார்த்தா இல்லத்தில் நிகழ்ந்த அமெரிக்காவின் அமைப்புசார் சமூகங்கள், மேற்கு மற்றும் தென்மேற்கு தொழில்துறை பகுதிகளின் அறக்கட்டளையின் தலைவர்களுக்கிடையேயான இந்தச் சந்திப்பின்போது இவ்வாறு அவர்களிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

மக்கள் தங்களை அமைப்புசார் நிலைக்கு உருவாக்கிக்கொள்ளும் திறனை பெரிதும் பாராட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்களின் செல்வம் என்பது அதன் ஒழுங்கமைக்கும் திறனில் உள்ளது என்றும் அவர்களிடம் எடுத்துக்காட்டினார்.

தங்கள் அமைப்புசார் சமூகங்கள் மற்றும் அறக்கட்டளையின் முன்னேற்றங்களைப் பற்றி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குத் தெரிவிக்கவும், இவற்றுடனான அடுத்த படிகள் குறித்து அவரிடம் ஆலோசனை செய்யவும் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அருள்பணியாளர்கள் மற்றும் பொதுநிலையினர் உட்பட ஏறத்தாழ 20 தலைவர்கள்,  RECOR என அழைக்கப்படும் அமைப்புசார் சமூகங்களின் புதிய திருஅவை வலையமைப்பு குறித்த தகவல்களைத் திருத்தந்தைக்கு வழங்கினர்.

இந்த வலைப்பின்னல் அமைப்பானது, அவர்களின் கத்தோலிக்க ஆயர்களுடன் இணைந்து, நற்செய்தியால் சுவைக்கப்பட்ட வாழ்க்கை முறையை உறுதி செய்யும் குறிக்கோளுடன், திருஅவையின் சமூகக் கோட்பாட்டைச் செயல்படுத்துவதில் முன்னணியில் ஈடுபடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 August 2024, 12:31