திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் அருள்சகோதரிகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் அருள்சகோதரிகள்  (ANSA)

எளிய மக்களுக்கு மிக அருகாமையில் இருப்பவர் திருத்தந்தை

2015ஆம் ஆண்டு கரோவானாவில் கேளிக்கைப் பூங்காவில் பணியாற்றுபவர்களை சந்தித்த திருத்தந்தை அவர்கள் இம்முறை ஓஸ்தியா லீதோவில் அம்மக்களைச் சந்திப்பது இரண்டாவது முறை.

மெரினா ராஜ் - வத்திக்கான்

மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தங்களுக்கு வழங்கிய திருத்தந்தையை அனைவரும் உண்மையாக அன்பு செய்கின்றோம் என்றும், எல்லோருக்குமான நண்பராக மிக அருகாமையில் இருப்பவராக, திருத்தந்தை தன்னை இச்சந்திப்பின் வழியாக வெளிப்படுத்தினார் என்றும் கூறினார் அருள்சகோதரி Geneviève Jeanningro.

ஜூலை 31 புதன்கிழமை உரோமிலிருந்து ஒரு மணி நேர தூர தொலைவில் உள்ள ஓஸ்தியா லீதோ என்னுமிடத்தில் உள்ள நிலா பூங்காவில் பணியாற்றும் கலைஞர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்ததை முன்னிட்டு, தனது கருத்துக்களை எடுத்துரைத்தார், அப்பணியாளர்களோடு இணைந்து செயல்படும் அருள்சகோதரி Geneviève Jeanningro.

இயேசுவின் சிறிய சகோதரிகள் சபையைச் சார்ந்த பிரான்ஸ் நாட்டு அருள்சகோதரி Geneviève தனது 50 ஆண்டுகால வாழ்வை இம்மக்களுக்காக அர்ப்பணித்துள்ளார். முன்னோக்கிச் செல்வதில் துயறுரும் தலத்திருஅவையினரோடு இருங்கள் என்ற தூய சார்லஸ் தே ஃபோக்கால்டு அவர்களின் வரிகளுக்கேற்ப, எளிய கலைஞர்களுடன் பயணிக்கும் சகோதரிகளின் பணிக்கு திருத்தந்தை பாராட்டு தெரிவித்ததையும் கூறி மகிழ்ந்தார் அருள்சகோதரி ஜெனிவீவ்.

திருத்தந்தை நம் அனைவரின் நண்பராக இருக்கின்றார் என்றும், அவர் கேளிக்கை பூங்காவில் பணியாற்றும் கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சந்தித்து மகிழ்ச்சியைக் கொடுத்தார் என்றும் கூறினார் அருள்சகோதரி Geneviève Jeanningro.

ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதன் மறைக்கல்விக்கு தனிப்பட்ட நபர்கள், குழுக்கள், கண்காட்சியில் பணிபுரிபவர்கள் என பலரை அழைத்துச் செல்கின்றார்.  

திருத்தந்தை எளிமையான இந்த மக்களைச் சந்தித்து மிகப்பெரிய அளவிலான மகிழ்ச்சியை எங்களுக்கு வழங்கியுள்ளார் என்றும், எல்லோருக்குமான நண்பராக மிக அருகாமையில் இருப்பவராக திருத்தந்தை தன்னை இதன் வழியாக வெளிப்படுத்தியுள்ளார் என்றும்  கூறினார் அருள்சகோதரி ஜெனிவீவ்.

கேளிக்கைப் பூங்காவில் பணியாற்றுபவர்களைத் திருத்தந்தை அவர்கள் சந்திப்பது இது இரண்டாவது முறை என்று கூறிய அருள்சகோதரி அவர்கள், மிகப்பெரிய மகிழ்ச்சியை எங்களுக்கு வழங்கிய திருத்தந்தையை நாங்கள் அனைவரும் உண்மையாக அன்பு செய்கின்றோம் என்று மீண்டும் மீண்டும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 August 2024, 15:28