தேடுதல்

என்சோ பியாங்கியின் நூல் "உடன்பிறந்த உணர்வு" என்சோ பியாங்கியின் நூல் "உடன்பிறந்த உணர்வு" 

வன்முறைக்கு எதிரான பாதுகாப்பு அரண், உடன் பிறந்த உணர்வே

வன்முறை மற்றும் போரை நோக்கி நம்மை எடுத்துச் செல்லும் பகைமை உணர்வை எதிர்க்க, உடன்பிறந்த உணர்வு ஒவ்வொரு மனிதரிலும் உயிர்பெற்றெழ வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

போஸே கிறிஸ்தவ ஒன்றிப்பு இயக்கத்தின் நிறுவனர் Enzo Bianchi அவர்களின் நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வன்முறை மற்றும் போர்களுக்கு எதிரான பாதுகாப்பு அரண், உடன் பிறந்த உணர்வே என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

உடன்பிறந்த உணர்வு என்ற தலைப்பில் என்சோ பியாங்கி அவர்கள் எழுதிய புத்தகத்தில் உடன் பிறந்த உணர்வு குறித்த தன் கருத்துக்களை பகிர்ந்துள்ள திருத்தந்தை, உலகின் அனைத்து கொடூரச் சிந்தனைகளையும் தடுத்து நிற்பது உடன் பிறந்த உணர்வே எனவும், மனித குலத்தின் துவக்க காலத்தில் இருந்தே போர் உணர்வு இருந்து வருகின்றது என்பதையும் தன் முன்னுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

வன்முறை மற்றும் போரை நோக்கி நம்மை எடுத்துச் செல்லும் பகைமை உணர்வை எதிர்த்து நிற்க உடன்பிறந்த உணர்வு ஒவ்வொரு மனிதரிலும் மீண்டும் மீண்டும் உயிர்பெற்றெழ வேண்டும் எனவும் கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்றைய நம் வாழ்வில் உடன்பிறந்த உணர்வு குறைபடுவதே நம் துயர்களுக்கு வழிவகுப்பதாக இருக்கிறது என உரைக்கும் திருத்தந்தை, உடன் பிறந்த உணர்வு இல்லையெனில் சுதந்திரமும் சமத்துவமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்பதையும் தன் முன்னுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Enzo Bianchi அவர்கள் தன் நூலில், உடன் பிறந்த உணர்வு என்பது, மனிதகுலத்திற்கான இறைஅழைத்தல் என விவரித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 September 2024, 16:14