தேடுதல்

இந்தோனேசியாவில் திருத்தந்தையின் திருப்பலி இந்தோனேசியாவில் திருத்தந்தையின் திருப்பலி  (ANSA)

கால்பந்து விளையாட்டரங்கில் திருத்தந்தையின் திருப்பலி

78 ஆயிரம் பேர் அமரக்கூடிய வசதியுடைய Gelora Bung Karno கால்பந்து விளையாட்டரங்கில் இந்தோனேசிய விசுவாசிகளுக்கு திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஆயர் பேரவை மையத்திலிருந்து 1.8 கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருப்பீடத் தூதரகத்திற்கு உள்ளூர் நேரம் காலை 11 மணிக்கு வந்த திருத்தந்தை, அங்கேயே மதிய உணவருந்தி சிறிது ஓய்வும் எடுத்துக்கொண்டார்.

வியாழக்கிழமை மாலை உள்ளூர் நேரம் 4 மணிக்கு, அதாவது இந்திய நேரம் 2 மணி 30 நிமிடங்களுக்கு 9 கிலோமீட்டர் பயணம் செய்து Gelora Bung Karno விளையாட்டரங்கை வந்தடைந்தார் திருத்தந்தை. 78 ஆயிரம் பேர் அமரக்கூடிய வசதியுடைய இந்த கால்பந்து விளையாட்டரங்கில் இந்தோனேசிய விசுவாசிகளுக்கு திருப்பலி நிறைவேற்ற இங்கு வந்தார் அவர். முதலில் அரங்கினுள்ளே அமர்ந்திருந்த விசுவாசிகளின் முன் காரில் ஒரு வலம் வந்தார் திருத்தந்தை. அத்திருப்பலியில் திருத்தந்தை வழங்கிய மறையுரையின் தமிழாக்கத்திற்கு இப்போது செவிமடுப்போம்.

இத்திருப்பலியை நிறைவுச்செய்து மாலை 7 மணிக்கு மேல் திருப்பீடத்தூதரகம் வந்தடைந்தார் திருத்தந்தை. இத்துடன் அவரின் செப்டம்பர் 5, வியாழக்கிழமையின் திருப்பயண நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன.

திருப்பலி அரங்கு
திருப்பலி அரங்கு

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 September 2024, 15:19