தேடுதல்

பாப்புவா நியூ கினியில் மக்கள் வரவேற்பு பாப்புவா நியூ கினியில் மக்கள் வரவேற்பு  (AFP or licensors)

வானொலியை அதிகமாகக் கேட்கும் பாப்புவா நியூ கினி மக்கள்

பாப்புவா நியூ கினி நாட்டின் 90 விழுக்காட்டு மக்கள் இன்னும் வானொலிக்கு செவிமடுப்பவர்களாக இருக்கிறார்கள் என்பது நமக்கு ஆச்சரியம் தரும் செய்தி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் ஏற்கனவே 1984ஆம் ஆண்டிலும் 1995 ஆம் ஆண்டிலும் பாப்புவா நியூ கினி நாட்டில் திருத்தூதுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப்பின் திருத்தந்தை ஒருவர் அந்நாட்டிற்கு திருப்பயணம் மேற்கொள்வது தற்போதேயாகும்.

பாப்புவா நியூ கினியில் திருப்பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தையை அங்குள்ள வானொலிகள் வரவேற்று நிகழ்ச்சிகளை வழங்கிவருகின்றன. பாப்புவா நியூகினி நாட்டில் இன்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்களைவிட வானொலிக்கு செவிமடுப்பவர்களே அதிகம். ஏனெனில் அந்நாட்டின் 80 விழுக்காட்டு மக்கள் இன்னும் கிராமங்களில் விவசாயத்தை நம்பித்தான் வாழ்ந்து வருகின்றனர். பாப்புவா நியூ கினி நாட்டின் 90 விழுக்காட்டு மக்கள் இன்னும் வானொலிக்கு செவிமடுப்பவர்களாக இருக்கிறார்கள் என்பது நமக்கு ஆச்சரியம் தரும் செய்திதான். திருத்தந்தைக்கு தன் வரவேற்பை வழங்கிய பாப்புவா நியூ கினியின் ரேடியோ மரியா என்ற வானொலி, திருத்தந்தையை அமைதியின் திருத்தூதுவர் என அழைத்து வரவேற்றுள்ளது. இங்குள்ள வானொலி நிகழ்ச்சிகள் தகவல் அளிப்பவைகளாக, நல ஆதரவுப்பணிகளை ஆற்றுபவைகளாக, சமூகப் பிரச்சனைகளை அலசி ஆராய்பவைகளாக உள்ளன. இவை சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதில் பெரும்பங்காற்றுகின்றன. திருத்தந்தையின் இந்த திருப்பயணத்தின்போதும் இவைகளின் பங்களிப்பு குறிப்பிடும்படியாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

நான்கு நாடுகளுக்கான திருப்பயணத்தை இம்மாதம் 2ஆம் தேதி உரோம் நகரிலிருந்து துவக்கி, தற்போது பாப்புவா நியூ கினியில் இருக்கும் திருத்தந்தையின் இப்பயணம் வெற்றியடைய நம் செபங்களை காணிக்கையாக்குவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 September 2024, 16:36