பத்திரிகையாளர்களுக்கு திருத்தந்தையின் வாழ்த்து
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
திருத்தந்தையின் விமானப்பயணத்தின்போது இடம்பெற்ற ஒரு நிகழ்வையும் குறிப்பிடுவது சிறப்பு. உரோமிலிருந்து ஜகார்த்தா நோக்கி 13 மணி நேர பயணத்தில் அவரின் திருப்பயணத்திட்டங்களை சமூகத்தொடர்பு சாதனங்களுக்கு உடனுக்குடன் அறிவிக்கவிருக்கும் நோக்கத்தில் திருத்தந்தையுடன் பயணம் செய்த ஏறக்குறைய 85 சமூக ஊடகவியலாளர்களை, விமானத்தில் அவர்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு திடீரென முன்னறிவிப்பின்றி வந்து சந்தித்தார் திருத்தந்தை.
அவர்கள் அனைவரும் எதிர்பாராத நிலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பத்திரிகையாளர்களின் பகுதிக்குச் சென்று, நிறைந்த புன்னகை மற்றும் மென்மையான குரலில் அவர்களை வரவேற்று, நன்றி தெரிவித்தார்.
மேலும், பத்திரிகையாளர்கள், பதிப்பாளர்கள், புகைப்படக்கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் என ஒவ்வொருவரையும் தனிப்பட்டவிதமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் திருத்தந்தை.
அச்சமயத்தில் அவர்களுள் சிலர் திருத்தந்தைக்கு தங்களின் சிறு நினைவுப்பரிசுப் பொருட்களை வழங்கினர், சிலர் தங்களின் ஜெபமாலைகளை ஆசிர்வதிக்கும்படி வேண்டி பெற்றுக்கொண்டனர், சிலர் தங்களின் துன்புறும் நண்பர்களுக்காக ஜெபிக்குமாறு வேண்டினர்.
மேலும், திருத்தந்தை அவர்கள் கூறிய நன்றியானது, உலகின் கடை எல்லை வரை பயணிக்கும் அவருடைய ஒன்றிப்பு உணர்வை வெளிப்படுத்துவதுடன், இயேசுவை போலவே, புலம்பெயர்ந்தவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள், ஓரங்கட்டப்பட்டவர்கள், ஆபத்தான பயணங்களை மேற்கொள்பவர்கள் ஆகியோரின் கதைகளை நினைவூட்டுவதாகவே அமைந்திருந்தது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்