தேடுதல்

வனிமோ மறைமாவட்ட விசுவாசிகளைச் சந்தித்த திருத்தந்தை வனிமோ மறைமாவட்ட விசுவாசிகளைச் சந்தித்த திருத்தந்தை 

வனிமோ மறைமாவட்ட விசுவாசிகளைச் சந்தித்த திருத்தந்தை

நான்கரை மணி நேரங்களே திருத்தந்தை வனிமோ நகரில் செலவிட்டு ஞாயிறன்றே போர்ட் மோர்ஸ்பி திரும்பவேண்டியது ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

பாப்புவா நியூ கினிக்கு வடமேற்கேயுள்ள வனிமோ துறைமுக நகரம், பசிபிக் பெருங்கடலுக்கு தென்மேற்கேயுள்ளது. வெள்ளை மணல் கடற்கரையைக் கொண்டுள்ள இந்நகரம், இந்தோனேசியா எல்லையிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலேயேயுள்ளது. பருவ மழைக்காடுகளைக் கொண்டுள்ள இந்நகரின் துறைமுகத்திலிருந்து மரங்கள் ஏற்றுமதிச் செய்யப்படுகின்றன. 90ஆம் ஆண்டுகளில் இத்துறைமுக நகரம் ஏற்றுமதி இறக்குமதி வரிகளிலிருந்து விலக்குப் பெற்றது. இதனால் 21ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் வெளிநாட்டு முதலீடுகள் இந்நகரில் அதிகரித்து, உள்கட்டமைப்புக்கள் மேம்படுத்தப்பட திட்டமிடப்பட்டது. பல்வேறு நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகள் நிறைவேற்றப்பட்டன.

உள்ளுர் நேரம் பிற்பகல் 3 மணி 15 நிமிடங்களுக்கு, இந்திய நேரம் காலை பத்து மணி 45 நிமிடங்களுக்கு வனிமோ நகரை வந்தடைந்த திருத்தந்தை, அங்கிருந்து 600 மீட்டர்கள் தொலைவிலுள்ள பேராலயம் சென்றடைந்தார். நான்கரை மணி நேரங்களே திருத்தந்தை வனிமோ நகரில் செலவிட்டு ஞாயிறன்றே போர்ட் மோர்ஸ்பி திரும்பவேண்டியிருந்ததால், இரண்டு நிகழ்ச்சிகளே அங்கு திட்டமிடப்பட்டிருந்தன. வனிமோ மறைமாவட்ட விசுவாசிகளைச் சந்தித்து உரை வழங்கல், மற்றும் மறைப்பணியாளர்களை சந்தித்து உரையாடுதல் என்பவையே அத்திட்டங்கள்.

வனிமோ பேராலய முன்பகுதியில் உள்ள வளாகத்தில் விசுவாசிகளை மாலை உள்ளூர் நேரம் 3 மணி 30 நிமிடங்களுக்கு  சந்தித்தார் திருத்தந்தை. வனிமோ ஆயருடன் இவ்வளாகத்திற்குள் வந்த திருத்தந்தையை வரவேற்கும் நிகழ்ச்சிகள் முதலில் இடம்பெற்றன.  வனிமோ ஆயர் Francis Meli அவர்களின் வரவேற்பு உரை இடம்பெற்றபின் பொதுநிலை மறைக்கல்வி ஆசிரியர் ஒருவரும், சிறுமிகளுக்கான Lujan இல்லத்தின் சிறுமி ஒருவரும் தங்கள் வாழ்வு சான்றை வழங்க பாரம்பரிய நடனம் ஒன்று அங்கு அரங்கேற்றப்பட்டது. அதன்பின் பெண் துறவியர் சார்பில் ஓர் அருள்கன்னியரும், குடும்பத்தின் சார்பில் ஒருவரும் சான்று பகர்ந்தனர். நான்கு பேரின் சான்று மற்றும் ஒரு பாரம்பரிய நடனத்திற்குப்பின் திருத்தந்தையின் உரையும் இடம்பெற்றது. அதன் தமிழாக்கச் சுருக்கத்திற்கு இப்போது செவிமடுப்போம்.  

இந்த உரையை நிறைவுச் செய்து, குழுமியிருந்த மறைமாவட்ட விசுவாசிகளிடையே காரில் ஒரு வலம் வந்த திருத்தந்தை, அங்கிருந்து உள்ளூர் நேரம் மாலை 4.30 மணிக்கு 12.4 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள Holy Trinity  பள்ளிக்கு மறைப்பணியாளர் குழுவை சந்திக்கப் புறப்பட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 September 2024, 15:46