தேடுதல்

ஜகார்த்தாவில் முதல் நாளில் குழந்தைகளுடன் திருத்தந்தை ஜகார்த்தாவில் முதல் நாளில் குழந்தைகளுடன் திருத்தந்தை  (ANSA)

இந்தோனேசியாவில் திருத்தந்தையர்

1989ஆம் ஆண்டு புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், தென் கொரியா, மொரோசியஸ் ஆகிய நாடுகளுடன் இந்தோனேசியாவிலும் திருப்பயணம் மேற்கொண்டார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

உலகிலேயே இஸ்லாமியர் அதிகமாக வாழும் இந்தோனேசியாவில் இரு திருத்தந்தையர் ஏற்கனவே திருப்பயணம் மேற்கொண்டுள்ளனர். 1970ஆம் ஆண்டு புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள், அவரின் ஒன்பதாவது, அதாவது, இறுதி வெளிநாட்டுத் திருப்பயணத்தில் ஈரான், பாகிஸ்தான், பிலிப்பீன்ஸ், சமோவா தீவு ஆஸ்திரேலியா, ஹாங்காங், இலங்கை ஆகியவைகளுக்கான திருப்பயணத்தின்போது இந்தோனேசியாவிலும் திருப்பயணம் மேற்கொண்டார். அதன்பின் 1989ஆம் ஆண்டு புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், தென் கொரியா, மொரோசியஸ் ஆகிய நாடுகளுடன் இந்தோனேசியாவிலும் திருப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர், சுதந்திரத்திற்காக போராடிக் கொண்டிருந்த கிழக்கு திமோர் பகுதியிலும் திருப்பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. தற்போது தனி நாடாக உருவாகியுள்ள கிழக்கு திமோரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தோனேசியா மற்றும் பாப்புவா நியு கினி நாடுகளில் திருப்பயணத்தை முடித்தபின், செப்டம்பர் 9,10,11 தேதிகளில் கிழக்கு திமோரின் தலைநகர் திலியில் திருப்பயணம் மேற்கொள்கிறார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 September 2024, 16:20