மகிழ்ச்சி, அமைதியை இழந்து தவிக்கும் மக்களைக் காக்கும் மரியா
மெரினா ராஜ் - வத்திக்கான்
போர் மற்றும் மோதல்களால் மகிழ்ச்சி, அமைதி, உடன்பிறந்த உணர்வு போன்றவற்றை இழந்து தவிக்கும் உலக மக்களை தூய செபமாலை அன்னை மரியா தாய்க்குரிய பார்வையால் கண்ணோக்குகின்றார் என்றும், ஆபத்தில் இருக்கும் உலக மக்களுக்காகப் பரிந்துபேசுகின்றார் என்றும் தனது குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
செபமாலை அன்னைக்கு சிறப்பு வணக்கம் செலுத்தும் இந்த அக்டோபர் மாதத்தின் இறுதி சனிக்கிழமையாகிய இன்று (அக்டோபர் 26) ஹேஸ்டாக் தூய செபமாலையின் அரசி அன்னை மரியா என்ற தலைப்பில் தனது கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சிறப்பு குழுக்கள் பொதுமறையுரைகள், மறைக்கல்வி உரைகள், சிறப்பு காணொளிச்செய்திகள் என எல்லாவற்றிலும் போரினால் பாதிக்கப்படும் மக்களை நினைவுகூர்ந்து செபிக்க வலியுறுத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செபமாலை அன்னையிடம் அம்மக்களுக்காக செபித்து செய்தி ஒன்றினை வலியுறுத்தியுள்ளார்.
போர் மற்றும் மோதலால் மகிழ்ச்சியையும், அமைதியையும், உடன்பிறந்த உணர்வையும் இழந்து தவிக்கின்ற மக்களை அன்னைக்குரிய பார்வையோடு கண்ணோக்கும், ஆபத்தில் இருக்கும் உலக மக்களுக்காகப் பரிந்துபேசும், வாழ்க்கையை வரவேற்கவும், அதனைக் காக்கவும், அறிவற்றப் போரினை நிராகரித்து வாழவும் அருள்தாரும் மரியே என்பதே திருத்தந்தையின் குறுஞ்செய்தி வலியுறுத்துவதாகும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்