திருஅவையில் 21 புதிய கர்தினால்கள் அறிவிப்பு
மெரினா ராஜ் – வத்திக்கான்
வருகின்ற டிசம்பர் 8 அன்னை மரியின் அமல உற்பவ நாளன்று திருஅவைக்கு 21 புதிய கர்தினால்கள் அறிவிக்கப்பட இருப்பதாகத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அக்டோபர் 6 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் வளாகத்தில் திருப்பயணிகளுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரையைத் தொடர்ந்த செப விண்ணப்பங்களின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை அவர்கள், புதிய கர்தினால்களாக அறிவிக்கப்பட உள்ளவர்களின் பெயரையும் எடுத்துரைத்தார்.
புதிய கர்தினால்களாக அறிவிக்கப்பட உள்ளவர்களின் பெயர்கள்
அப்போஸ்தலிக்க தூதுவரான பேரருள்திரு Angelo Acerbi,
பெருவின் லீமா உயர் மறைமாவட்ட ஆயர் பேராயர் Carlos Gustavo Castillo Mattasoglio,.
அர்ஜெண்டினாவின் சந்தியாகு உயர் மறைமாவட்ட பேராயர் Vicente Bokalic Iglic,
எக்குவதோரின் Guayaquil உயர் மறைமாவட்ட பேராயர் Cabrera Gerardo Cabrera Herrera,
சிலியில் உள்ள சந்தியாகு உயர்மறைமாவட்ட பேராயர் Natalio Chomalí Garib,
ஜப்பானின் டோக்கியோ உயர்மறைமாவட்ட பேராயர் Tarcisio Isao Kikuchi,
பிலிப்பீன்ஸின் Kalookan மறைமாவட்ட ஆயர் Pablo Virgilio Siongco David
செர்பியாவின் Beograd -Smederevo உயர்மறைமாவட்ட பேராயர் Ladislav Nemet,
Porto Alegre உயர்மறைமாவட்ட பேராயர் Jaime Spengler,
ஐவரி கோஸ்டின் Abidjan உயர்மறைமாவட்ட பேராயர் Ignace Bessi Dogbo
Algeriaவின் Alger உயர்மறைமாவட்ட ஆயர் Jean-Paul
இந்தோனேசியாவின் போகோர் மறைமாவட்ட ஆயர், Paskalis Bruno Syukur
ஈரானின் Teheran Ispahan உயர்மறைமாவட்ட பேராயர் Joseph Mathieu,
இத்தாலியின் தூரின் உயர்மறைமாவட்ட பேராயர் Roberto Repole
உரோம் மறைமாவட்ட அதிபர் தந்தையான பேரருள்திரு Baldassare Reina,
கனடாவின் Toronto உயர்மறைமாவட்ட பேராயர், Francis Leo
உரோம் தூய மேரி மேஜர் பெருங்கோவிலின் இணைப்பேராயர் Rolandas Makrickas,
உக்ரைனின் Melbourne மறைமாவட்ட ஆயர் Mykola Bychok
இறையியலாளர் அருள்தந்தை Timothy Peter Joseph Radcliffe
ஒருங்கிணைந்த மனித மேம்பாட்டுப் பணிக்கான திருப்பீடத்துறையின் துணைச் செயலாளர் அருள்தந்தை Fabio Baggio
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூதுப்பயணங்களுக்குப் பொறுப்பான பேரருள்திரு George Jacob Koovakad
கர்தினால்களாக அறிவிக்கப்பட உள்ளவர்களின் பெயர்களை எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இரக்கமும் உண்மையும் நிறைந்த நித்திய குருவான இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்துவதன் வழியாக, கடவுளின் தூய மக்களின் நன்மைக்காக உழைக்க உரோம் ஆயர் பணியில் தனக்கு உதவுவார்கள் என்றும் எடுத்துரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்