"புத்தகமும் தூய ஆவியும்" கண்காட்சிக்கு திருத்தந்தையின் செய்தி
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஞானம், விஞ்ஞானம் பிறரன்புப்பணிகள் ஆகியவற்றின் உயர்ந்த பலனாக, நிலையான மகிழ்ச்சியை, புனித பொனவெந்தூர் மற்றும் தாமஸ் அக்குயினாஸ் என்னும் இரண்டு ஆசிரியர்கள் நமக்குக் கற்பிக்கிறார்கள் என்றும், நம்மை எதிர்நோக்கின் திருப்பயணிகளாக மாற்றிக்கொள்ளத் தூண்டுகிறார்கள் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனித பொனவெந்தூர் மற்றும் தாமஸ் அக்குயினாஸ் அவர்களது இறப்பின் 750 ஆவது ஆண்டை முன்னிட்டு வத்திக்கான் நூலகத்தாரல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ”புத்தகமும் தூய ஆவியும்” என்ற கண்காட்சிக்கு வாழ்த்துச்செய்தி ஒன்றினை வத்திக்கான் நூலக காப்பாளர் பேரருள்திரு வின்சென்சோ ஜானி அவர்களுக்கு எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனித பொனவெந்தூர் மற்றும் தாமஸ் அக்குயினாஸ் அவர்களின் கையெழுத்து, குறியீடுகள், வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகள், செயல்பாடுகள் தொடர்பான படைப்புகள் மற்றும் ஆவணங்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், இவ்விரு மறைவல்லுநர்களின் படைப்புக்கள் திருஅவை மற்றும் கலாச்சாரத்திற்கான ஒளியாகவும், உத்வேகத்தின் ஆதாரங்களாகவும் இருக்கின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறையியலின் ஒளிர்வுகளாக திகழும் அவர்களின் படைப்புக்கள் அறிவார்ந்த ஆழம், ஆன்மீக வாழ்க்கை, அறிவியல், ஞானம், பணிவு பிறரன்புப்பணி போன்றவற்றில் நம்மை வளர்க்கின்றன என்றும், தாராளமான மேய்ப்புப்பணி ஆர்வம் மற்றும் மறைப்பணி ஆற்றலுடன் பகிர்ந்து கொள்ள நமக்கு அழைப்புவிடுக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்