தேடுதல்

குடும்பத்தாருடன் திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப்படம்) குடும்பத்தாருடன் திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப்படம்)  (Vatican Media)

குடும்பத்தில் உரையாடல்கள் எப்போதும் இருக்க வேண்டும்

உரையாடல் இல்லாத குடும்பம் இறந்த குடும்பம் போன்றது - திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

குடும்பத்தில் எப்போதும் உரையாடல்கள் இருக்க வேண்டும் என்றும், மோதல்கள் இருந்தாலும் தங்களுக்குள் உரையாடல் மேற்கொள்பவர்களாக குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 25 வெள்ளிக்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 16ஆவது ஆயர்கள் மாமன்றத்தின்போது குடும்பத்தில் சினோடாலிட்டி குறித்து காணொளியின் வாயிலாக எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 2 ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய 16ஆவது உலக ஆயர்கள் மாமன்றத்தின் இரண்டாம் பகுதியானது அக்டோபர் 27 சனிக்கிழமையுடன் நிறைவிற்கு வர இருக்கின்ற நிலையில் வத்திக்கான் செய்தியாளர் ஒருவர், குடும்பத்தில் ஒருங்கிணைந்த நிலை பற்றி கேட்டபோது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

குடும்பத்தில் சினோடாலிட்டி என்பது பற்றிக் கூறவேண்டுமென்றால், குடும்பத்தில் உரையாடல் இருக்க வேண்டும் என்று மட்டுமே சொல்லத் தோன்றுகிறது என்றும், சில நேரங்களில் மோதல்கள், சண்டைகள் இருந்தாலும், உரையாடல் என்பது எப்போதும் இருக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

உரையாடல் இல்லாத குடும்பம் இறந்த குடும்பம் போன்றது என்று கூறிய திருத்தந்தை அவர்கள் குடும்பத்தார் அனைவரையும் ஆசீர்வதிக்கின்றேன் எனக்காக செபியுங்கள் என்றும் அச்செய்தியில் குறிப்பிட்டு தனது காணொளியினை நிறைவு செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 October 2024, 14:20