திருத்தந்தையுடன் கிர்கிஸ்தான் குடியரசின் தலைவர் சந்திப்பு
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
அக்டோபர் 4, வெள்ளிக்கிழமையன்று கிர்கிஸ்தான் குடியரசின் தலைவர் Sadyr Zhaparov அவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்தபோது, இரு நாடுகளுக்கும் இடையே நிலவிவரும் நல்லுறவு குறித்து கலந்துரையாடப்பட்டது.
திருப்பீடத்திற்கும், கிர்கிஸ்தானுக்கும் இடையேயான நல்லுறவு குறித்தும், நலவாழ்வு, கல்வி, பண்பாடு ஆகிய துறைகளில் ஒருவருக்கொருவருடனான ஒத்துழைப்பு குறித்தும், உள்ளூர் திருஅவையின் நல்செயல்பாடுகள் குறித்தும் அரசுத்தலைவர் குழுவும் திருப்பீட அதிகாரிகளும் உரையாடினர் என்று திருப்பீடச் செயலகம் தெரிவித்துள்ளது.
அன்பும் மென்மையும் என்ற தலைப்பிலான சுடுமண் சிற்பம், திருப்பீடம் குறித்த புகைப்பட புத்தகம், இவ்வாண்டு அமைதிக்கான செய்தியின் பிரதி ஆகியவற்றை திருத்தந்தை அரசுத்தலைவர் Sadyr Zhaparov அவர்களுக்கு வழங்கினார்.
அன்பும் மென்மையும் என்ற சிற்பத்தின் ஒருபுறம், அமைதியை விரும்புகின்ற, மனிதம் மற்றும் இயற்கையை நேசிக்கின்ற அசிசியின் புனித பிரான்சிஸின் உருவமும், மறுபுறம், மனிதகுலம் முழுவதுடனும் அமைதி மற்றும் சுற்றுச்சூழலுக்கான அக்கறையின் அவசியத்தை வலியுறுத்துகின்ற, மாசுபாட்டால் அச்சுறுத்தப்படும் படைப்பை நோக்கிய நமது பொறுப்பை நினைவுபடுத்துகின்ற உலகின் பிம்பமும் உள்ளது.
அதேவேளை, கிர்கிஸ்தானின் மலைப்பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் தேன் நிரப்பப்பட்ட அலங்கரிக்கப்பட்ட ஜாடிகள், வண்ணமயமான கம்பளியால் செய்யப்பட்ட புனித பேதுரு பேராலயத்தின் படம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட கைவினைப் பொருள்களான தேநீர் கோப்பைகளையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அதிபர் Sadyr Zhaparov வழங்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்