நம் இதயங்களை மாற்றும் தூய ஆவியார்
மெரினா ராஜ் – வத்திக்கான்
தூய ஆவி நம் இதயங்களை மாற்றுகின்றார். அவருடைய உடனிருப்பால் நம்மை அருள்பொழிவு செய்கின்றார் என்றும், திருஅவையின் எதார்த்தத்தை, சூழலை நமக்கு புரியவைக்கின்றார் என்றும் டுவிட்டர் குறுஞ்செய்தி ஒன்றில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அக்டோபர் 28 திங்கள்கிழமை திருத்தூதர்களான தூய யூதா ததேயு மற்றும் சீமோன் திருவிழாவினை திருஅவை சிறப்பிக்கும் வேளையில் ஹேஸ்டாக் செப ஆண்டு என்ற தலைப்பில் தனது கருத்துக்களை டுவிட்டர் குறுஞ்செய்தியாகப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நாம் இயேசுவிடம், இறைத்தந்தையிடம், அன்னை மரியாவிடம் செபிக்கின்றோம் ஆனால் தூய ஆவியாரிடம் செபித்து உரையாடுவதில்லை, ஆனால் தூய ஆவியார் நமது உள்ளங்களை மாற்றுகின்றார், அவரது உடனிருப்பால் நம்மை அருள்பொழிவு செய்கின்றார், திருஅவையின் எதார்த்தத்தை நமக்குப் புரியவைக்கின்றார் என்பதே திருத்தந்தையின் டுவிட்டர் குறுஞ்செய்தி வலியுறுத்துவதாகும்.
தூய ஆவியாரின் செயல்பாடு நமது வாழ்வில் நமக்கு மிகவும் தேவை என்பதை அடிக்கடி வலியுறுத்தி வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘தூய ஆவியாரும் மணமகளும். நம் நம்பிக்கையாம் இயேசுவை நோக்கி இறைமக்களை வழிநடத்தும் தூய ஆவியார்” என்ற தலைப்பில் தனது கருத்துக்களை புதன் மறைக்கல்வி உரையின் வாயிலாக மக்களுக்கு எடுத்துரைத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்