தேடுதல்

ஏழ்மையான மனிதர் ஏழ்மையான மனிதர்  

உலக வறுமை ஒழிப்பு நாளுக்குத் திருத்தந்தையின் குறுஞ்செய்தி

நீர், உணவு, வேலை, மருந்து, நிலம், வீடு என ஒவ்வொரு மனிதனுக்கும் எல்லாம் கிடைக்கும் ஓர் உலகத்தை கனவு காண்போம் - திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஏழைகளை தயவு செய்து மறந்து விடாதீர்கள் என்றும், எல்லாருக்கும் எல்லா அடிப்படைத் தேவைகளும் கிடைக்கும் உலகத்தைக் கனவு காண்போம் என்றும் குறுஞ்செய்தி ஒன்றில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 17 வியாழனன்று சிறப்பிக்கப்படும் உலக வறுமை ஒழிப்பு நாளை முன்னிட்டு இவ்வாறு தனது கருத்துக்களைக் குறுஞ்செய்தியாகப் பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உண்மையான செல்வத்தை பலவீனமானவர்களை சந்திக்கும்போது நாம் கண்டடைகின்றோம் என்று மற்றொரு குறுஞ்செய்தியினையும் பதிவிட்டுள்ளார்.

ஹேஸ்டாக் வறுமைக்கு முடிவு என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள குறுஞ்செய்தியில், ஏழைகளை தயவு செய்து மறந்து விடாதீர்கள்,  நீர் உணவு, வேலை, மருந்து, நிலம், வீடு என ஒவ்வொரு மனிதனுக்கும் எல்லாம் கிடைக்கும் ஓர் உலகத்தைக் கனவு காண்போம் என்று வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும் தனது இரண்டாவது குறுஞ்செய்தியில் உண்மையான செல்வம் என்பது கடவுளுடனும் மற்றவர்களுடனும் ஏற்படும் சந்திப்பதில் கண்டறியப்படுகின்றது என்றும், குறிப்பாக தவறான வாழ்வுக்கலாச்சாரம் நிராகரிக்க முயலுகின்ற மிகவும் பலவீனமானவர்களில் கண்டறியப்படுகின்றது என்றும்  குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

ஒவ்வொரு நபரின் மாண்பும் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படும் ஓர் உலகத்தை நம்மால் உருவாக்க முடியும் என்றும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 October 2024, 15:34