ஏழைகளுக்கான நம் பணி ஆரவாரங்களுடன் வருவதில்லை
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
ஏழைகளுடன் இணைந்து ஏழைகளுக்காக நாம் செய்யும் பணி ஆரவாரங்களை எழுப்புவதில்லை என தன் டுவிட்டர் குறுஞ்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை.
ஏழைகளுடன், ஏழைகளுக்காக நாம் செய்யும் பணி ஒலிகளை எழுப்புவதில்லை என்றும் நாளுக்கு நாள் பொதுநலனுக்கான வளர்ச்சியை ஏற்படுத்துகிறது என்றும் அக்டோபர் 25ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்களால் துவக்கப்பட்ட திருத்தந்தையரின் டுவிட்டர் பக்கத்தில் இதுவரை ஆங்கிலத்தில் மட்டும் 5683 குறுஞ்செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை 1 கோடியே 85 இலட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்