தேடுதல்

அருள்பணி Gustavo Gutierrez அருள்பணி Gustavo Gutierrez 

விடுதலை இறையியலாளரின் மரணத்திற்கு திருத்தந்தை இரங்கல்

1928ஆம் ஆண்டில் பெருவில் பிறந்த அருள்பணி குஸ்தாவோ அவர்கள், குருத்துவப்பணியைத் தேர்வுச் செய்வதற்கு முன்னர் மருத்துவக் கல்வியைப் பயின்றவர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

தென் அமெரிக்க விடுதலை இறையியலின் தந்தை என அழைக்கப்படும் அருள்பணி Gustavo Gutiérrez அவர்களின் அடக்கச் சடங்கையொட்டி அக்டோபர் 24 வியாழனன்று பெரு நாட்டிற்கு அனுதாப காணொளிச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 22ஆம் தேதி இறைபதம் சேர்ந்த 96 வயது நிரம்பிய தொமினிக்கன் துறவுசபை அருள்பணியாளர் Gustavo அவர்கள், 24ஆம் தேதி அடக்கம் செய்யப்பட்ட நிகழ்வுக்கென வழங்கப்பட்ட திருத்தந்தையின் காணொளிச் செய்தி, அருள்பணி Gustavo அவர்கள் திருஅவையில் ஓர் உயர்ந்த மனிதர் எனவும், எப்போது மௌனமாக இருக்க வேண்டும் என்பதை அறிந்தவர் எனவும் அதில் பாராட்டியுள்ளார்.

துயரங்களை தாங்குவதில் தனக்கான நேரத்தை ஏற்று செயல்பட்ட அருள்பணியாளர் Gustavo அவர்கள், எவ்வாறு அப்போஸ்தலிக்க கனிகளையும், வளமான இறையியலையும் வழங்குவது என்பதையும் அறிந்திருந்தவர் எனவும் திருத்தந்தை தன் அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அருள்பணி குஸ்தாவோ அவர்களை நினைவுகூரும் அதேவேளை, அவரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக அனைவரும் அயராது செபிக்குமாறும் திருத்தந்தை அதில் விண்ணப்பம் ஒன்றையும் விடுத்துள்ளார்.

1928ஆம் ஆண்டில் பெருவில் பிறந்த அருள்பணி குஸ்தாவோ அவர்கள், குருத்துவப்பணியைத் தேர்வுச் செய்வதற்கு முன்னர் மருத்துவக் கல்வியைப் பயின்றவர்.

ஐரோப்பாவில் குருத்துவப் படிப்பை முடித்து தன் 31ஆம் வயதில் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்ட இவர், லீமாவில் உள்ள சேரிகளில் பணியாற்றிக்கொண்டே பெருவின் பாப்பிறை கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் கற்பித்துக்கொண்டிருந்த காலத்தில், விடுதலை இறையியல் அவரில் உருவெடுக்கத் துவங்கியது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 October 2024, 17:09