தேடுதல்

உலக அமைதிக்காக செபிக்கும் திருத்தந்தை (கோப்புப்படம்) உலக அமைதிக்காக செபிக்கும் திருத்தந்தை (கோப்புப்படம்)  (ANSA)

உலக அமைதிக்காக ஒன்றிணைந்து செபிப்போம் – திருத்தந்தை பிரான்சிஸ்

போரை விரும்புபார்களின் இதயத்தைக் கடவுள் ஒளிரச்செய்து, போரினால் மக்கள் சந்திக்கின்ற அவல நிலையை அவர்கள் கண்முன் காட்டுவாராக என்று ஒன்றிணைந்து செபிப்போம் மற்றும் அமைதி என்ற தலைப்பில் இரண்டு குறுஞ்செய்திகளைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

போர்களை விரும்புகின்ற, அவற்றை வழிநடத்துகின்ற, தேவையில்லாமல் நீட்டிக்கின்ற, அதில் இலாபத்தை சம்பாதிக்கின்ற மனிதர்களுக்காக செபிப்போம் என்றும், மத்திய கிழக்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போர் நிறுத்தப்பட பன்னாட்டு சமூகத்திற்கு அழைப்புவிடுக்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 12 சனிக்கிழமை ஹேஸ்டாக் ஒன்றிணைந்து செபிப்போம் மற்றும் அமைதி என்ற தலைப்பில் இரண்டு குறுஞ்செய்திகளைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒன்றிணைந்து செபிப்போம் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள தனது முதல் குறுஞ்செய்தியில் போர்களை விரும்புகின்ற, அவற்றைத் தொடர்ந்து நடத்துகின்ற, இயக்குகின்ற, தேவையில்லாமல் நீட்டிக்கின்ற அதிலிருந்து இழிவான இலாபத்தைப் பெறுகின்ற மக்களுக்காக ஒன்றிணைந்து செபிப்போம் என்றும், கடவுள் அவர்களின் இதயத்தை ஒளிரச்செய்து, போரினால் மக்கள் சந்திக்கின்ற அவல நிலையை அவர்கள் கண்முன் காட்டுவாராக என்றும் பதிவிட்டுள்ளார்.

அமைதி என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள இரண்டாவது குறுஞ்செய்தியில், மத்திய கிழக்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பழிவாங்கும் போர்ச்சூழலானது முடிவிற்கு வரவும், அப்பகுதியில் உள்ள மக்களை இன்னும் அதிகமான போர்ச்சூழல் தாக்காத வகையில் போர்த்தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும் என்று பன்னாட்டு சமூகத்திற்கு அழைப்புவிடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 October 2024, 15:27