தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  (VATICAN MEDIA Divisione Foto)

தாழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியோடு அறுவடை செய்வோம்

எதையும் எதிர்பார்க்காமல் பொறுமையோடு விதைத்தவர்கள் மற்றும், கடவுளின் ஆச்சர்யமூட்டும் தருணத்திற்காகக் காத்திருக்கத் தெரிந்தவர்கள் போன்று நாம் பொறுமையோடு காத்திருக்க வேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் – வத்திக்கான்

கடவுள் நம்மிடம் ஒப்படைத்துள்ள சிறு விதையை விதைத்து வளார்த்து மகிழ்ச்சியோடும் தாழ்ச்சியோடும் அறுவடை செய்வோம் என்றும், பொறுமை என்னும் கடவுளின் பண்பில் நாம் வளரவேண்டும் என்றும் டுவிட்டர் குறுஞ்செய்தி ஒன்றில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 30 சனிக்கிழமை திருத்தூதரான தூய அந்திரேயாவின் திருவிழாவை முன்னிட்டு பொறுமை என்னும் பண்பில் நாம் வாழ வலியுறுத்தி குறுஞ்செய்தி ஒன்றினை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எதையும் எதிர்பார்க்காமல் பொறுமையோடு விதைத்தவர்கள், கடவுளின் ஆச்சர்யமூட்டும் தருணத்திற்காகக் காத்திருக்கத் தெரிந்தவர்கள் போன்று நாம் பொறுமையோடு காத்திருக்க வேண்டும் என்றும், நம்மிடம் கடவுள் ஒப்படைத்துள்ள சிறு விதையை பணிவோடும் மகிழ்ச்சியோடும் நாம் வளர்ப்போம் அறுவடை செய்வோம் என்றும் அச்செய்தியில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 November 2024, 14:19