தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

நற்செய்தி என்ற வார்த்தை மகிழ்ச்சியான செய்தி என்று பொருள்படுகிறது

நற்செய்தி என்னும் மகிழ்ச்சியான செய்தியை நாம் மகிழ்ச்சியற்ற மற்றும் ஏமாற்றம் நிறைந்த முகத்துடனும் சோகமான முகத்துடனும் வெளிப்படுத்த முடியாது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நற்செய்தி" என்ற வார்த்தைக்கு மகிழ்ச்சியான செய்தி என்று பொருள் என்றும், இதனை மகிழ்ச்சியற்ற மற்றும் ஏமாற்றம் நிறைந்த முகத்துடனும் சோகமான முகத்துடனும் வெளிப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

நவம்பர் 27, இப்புதனன்று பதிவிட்டுள்ள தனது குறுஞ்செய்தி ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கும் ஒருவர் மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக் கொள்வதைப்போலவும், விலை உயர்ந்த ஒரு முத்தைக் காணும் வணிகர் ஒருவர் மகிழ்ச்சியுடன்போய் தமக்குள்ள யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்வதைப் போலவும் நாமும் மகிழ்ச்சியுடன் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 November 2024, 12:17