தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

ஆண்டவரின் வருகைக்காக விழிப்புடனும் உறுதியுடனும் காத்திருப்போம்

ஒவ்வொரு நாளும் நமதாண்டவர் நம்மை வந்து சந்திக்கிறார், நம்மோடு உரையாடுகிறார், எதிர்பாராத வழிகளில் தன்னை நமக்கு வெளிப்படுத்துகிறார், இறுதிகாலத்தில் அவர் மீண்டும் வருவார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

நம் விசுவாசப் பயணத்தில் கடவுளுக்காக நாம் காத்திருப்பது ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது என நவம்பர் 29 வெள்ளிக்கிழமையன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவனுக்காக நாம் காத்திருப்பது என்பது நம் விசுவாசப் பயணத்தின் ஒரு முக்கியப்பகுதி என தன் டுவிட்டர் குறுஞ்செய்தியில் கூறும் திருத்தந்தை, ஒவ்வொரு நாளும் நமதாண்டவர் நம்மை வந்து சந்திக்கிறார், நம்மோடு உரையாடுகிறார், எதிர்பாராத வழிகளில் தன்னை நமக்கு வெளிப்படுத்துகிறார், மற்றும், காலத்தின், வாழ்வின் இறுதிகாலத்தில் அவர் மீண்டும் வருவார் என அதில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வரவிருக்கும் ஆண்டவர், நாம் விழிப்புடனும், காத்திருப்பதில் உறுதியுடனும் இருக்குமாறு நமக்கு வலியுறுத்துகிறார் என மேலும் தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 November 2024, 15:59