தேடுதல்

47ஆவது திருத்தூதுப் பயண நிறைவு

பிற்பகல் மூன்று மணியளவில் நெப்போலியன் தோட்டம் என்றழைக்கப்படும் Place d’Austerlitz, என்னுமிடத்தில் அஜாக்சியோ மக்களுக்கு திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

டிசம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் திருத்தூதுப் பயணமாக கோர்சிகா தீவிற்கு சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காலையில் மதம் சார்ந்த மாநாட்டில் உரையாற்றியும் விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் அம்மறைமாவட்ட ஆயர்கள் மற்றும் துறவறத்தாருக்கு உரையாற்றியும் தனது பயணத்தின் முதல் பகுதியை நிறைவு செய்தார். விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் இருந்து புறப்பட்ட திருத்தந்தை அவர்கள்,  ஆயர் இல்லத்தில் மதிய உணவு உண்டு இளைப்பாறினார்.

பிற்பகல் மூன்று மணியளவில் நெப்போலியன் தோட்டம் என்றழைக்கப்படும் Place d’Austerlitz, என்னுமிடத்தில் அஜாக்சியோ மக்களுக்கு திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றினார். ஏராளமான மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் திருத்தந்தையின் திருப்பலியில் பப்க்கேற்றனர். 

திருப்பலி நிறைவுற்றதும் மாலை 5.30 மணியளவில் அஜாக்சியோ பன்னாடு விமான நிலையத்தில் குடியரசுத்தலைவரை சந்திக்க உள்ள திருத்தந்தை அவர்கள்,  பிரான்ஸ் உள்ளூர் நேரம் மாலை 6.15 மணியளவில் அஜாக்சியோ விமான நிலையத்திலிருந்து புறப்பட உள்ள திருத்தந்தை அவர்கள், இரவு 7.00 மணியளவில் உரோம் பியுமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்தை வந்து சேர்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 December 2024, 17:59