பாதுகாக்கப்பட வேண்டிய விலைமதிப்பற்ற புதையல் குடும்பம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
குடும்பம் என்பது சமூகத்தின் உயிரணு, அது ஆதரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டிய விலைமதிப்பற்ற புதையல் என்றும், வத்திக்கான் வளாகத்தில் குடும்பமாக வந்திருந்து மூவேளை செப உரையில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் நன்றி என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 29 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செபஉரையின் இறுதியில் எடுத்துரைத்த செப விண்ணப்பங்களின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை அவர்கள், உலகின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த அனைத்துக் குடும்பங்களையும் வாழ்த்தினார்.
தென்கொரியாவில் ஏற்பட்ட விமான விபத்தில் இறந்தவர்கள் ஆன்மா இறைவனின் நிறையமைதி பெற செபிப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த ஆன்மிக நெருக்கத்தையும் உடனிருப்பையும் வழங்குவதாகவும் எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தார் அனைவருக்காகவும் தொடர்ந்து செபிப்பதாகவும் கூறினார்.
போர் மற்றும் மோதல்களினால் துன்புறும் உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரயேல், மியான்மார், சூடான், தெற்கு கீவு போன்ற பகுதிகள் மக்கள் அனைவருக்காகவும் செபிப்போம் என்றும் அவர்களுக்கு இறைவன் அமைதி என்னும் கொடையினை அளித்தருள வேண்டுவோம் என்றும் கூறினார் திருத்தந்தை.
உலகெங்கிலும் இருந்து வந்திருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை அவர்கள் குறிப்பாக, Pero-Cerchiate திருப்பயணிகள், வரேசே பகுதி மக்கள், கரியானோ தூய பேதுரு பங்கு ஆலயம், மற்றும் கதோனேகே ஆலய இளையோர், க்ளூசோன், கியுடுனோ, அட்ராரா தூய மார்ட்டின், மற்றும் அல்மென்னோ தூய பர்த்தலோமியோ (Clusone, Chiuduno, Adrara San Martino, Almenno San Bartolomeo) பங்கைச்சார்ந்த உறுதிப்பூசுதல் பெற உள்ள சிறார், இலத்தீனா, வாஸ்தோ, சொவியோரே பகுதி சாரண இயக்கத்தார் ஆகிய அனைவரையும் வாழ்த்தினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்