அரவணைக்கின்ற, வரவேற்கின்ற வாழ்விடமாக இருப்போம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
நாம் எங்கு சென்றாலும் திருஅவை நமக்கு வாழ்விடமாகவும், அரவணைக்கின்ற வரவேற்கின்ற இடமாகவும் இருக்கின்றது என்றும், புலம்பெயர்ந்தோர்க்கு பணியாற்றும் இல்லம் அரவணைக்கின்ற வரவேற்கின்ற வாழ்விடம் போல் இருக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 16 திங்கள்கிழமை வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் இஸ்பெயினில் வாழும் பிலிப்பீன்ஸ் சமூகத்தின் பிரதிநிதிகள் ஏறக்குறைய 60 பேரை சந்தித்த போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் “Tahanan என்றழைக்கப்படும் அவர்களது பணித்தளம் பற்றிய பெயர்க்காரணத்தை எடுத்துரைத்தார்.
எண்ணற்ற சிரமங்களையும் தவறான புரிதல்களையும் புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்கின்றனர், அது அவர்களது நல்வாழ்விற்கு முள்கள் போன்று எதிராக நிற்கின்றன என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், அன்னை மரியின் பாதுகாப்பையும் ஆதரவையும் நம்பும்போது பிரச்சினைகளை எதிர்கொள்ளவும், நம்பிக்கையை இழக்காமல் இருக்கவும் நம்மால் முடிகின்றது என்றும் எடுத்துரைத்தார்.
ஒருங்கிணைந்த கலாச்சாரம் பற்றி எடுத்துரைக்கும் தூய இலாரன்ஸ் மிகவும் அழகானவர் அவரது குடும்பம் சீன பிலிப்பிய இனத்தைச் சார்ந்தது என்றும், புலம்பெயர்ந்த அவர்கள் குடும்பத்தாரிடம் கடவுள், நம்பிக்கை, அன்பு, பிறர் பணியாற்றும் மனம் கொண்ட சான்றுள்ள வாழ்க்கை வாழ அழைப்புவிடுத்தார் என்றும் கூறினார் திருத்தந்தை.
தங்களது சொந்த நிலத்தை விட்டு வெளியேறி, இயேசுவைத் தழுவியவர் தூய இலாரன்ஸ் என்றும், நம்பிக்கை இழக்காமல் சிரமங்களை எதிர்கொண்டு, உடன் சகோதரர்களின் பணியில் தன்னை அர்ப்பணித்து வரவேற்கும் இல்லமாக தன்னை மாற்றியவர் அவர் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்