தேடுதல்

பிரெஞ்சு அரசுத்தலைவருடன் திருத்த்தந்தை பிரெஞ்சு அரசுத்தலைவருடன் திருத்த்தந்தை  

பிரெஞ்சு அரசுத்தலைவருடன் திருத்தந்தை பிரான்சிஸ்

அஜாக்சியோ உள்ளூர் நேரம் மாலை 7.13 மணியளவில் விமானத்தில் புறப்பட்ட திருத்தந்தை அவர்கள் உரோம் பியுமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்தை மாலை 7. 56 மணிக்கு வந்தடைந்தார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

தனது 47 ஆவது திருத்தூதுப் பயணமாக கோர்சிகா தீவுப்பகுதிக்கு டிசம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அஜாக்சியோ விமான நிலையத்தில் உள்ள ஒரு சிறு அறையில் பிரெஞ்சு அரசுத்தலைவர் இம்மானுவேல் மக்ரோனைச் சந்தித்து உரையாடினார்.

பரிசுப்பொருள்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அரசுத்தலைவரின் வருகைக்காக தனது நன்றியினைத் தெரிவித்த திருத்தந்தை அவர்கள், நகைச்சுவை உணர்வை ஒருபோதும் இழந்துவிடக்கூடாது, எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தனது திருத்தூதுப்பயண நிறைவில் தன்னைச் சந்திக்க பிரெஞ்சு அரசுத்தலைவர் வந்திருப்பது அவரின் ஆளுமையையும் சந்திப்பிற்கு அவர் தரும் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கின்றது என்று கூறி வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், ( esortazione apostolica   Gaudete et Exsultate)  சுற்றுமடல்களின் பிரதிகளை அரசுத்தலைவருக்கு வழங்கினார்.

திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணத்தில் கோர்சிகா மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாக எடுத்துரைத்த அரசுத்தலைவர் மக்ரோன் அவர்கள், கோர்சிகா மற்றும் பிரான்ஸ் மக்கள் சார்பில் திருத்தந்தைக்கு நன்றி கூறுவதாகவும், வரவிருக்கும் யூபிலி ஆண்டிற்கான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் எடுத்துரைத்தார்.  

அஜாக்சியோ உள்ளூர் நேரம் மாலை 7.13 மணியளவில் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட திருத்தந்தை அவர்கள் உரோம் பியுமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்தை மாலை 7. 56 மணிக்கு வந்தடைந்தார்.

மதங்கள் சார்ந்த மாநாட்டின் நிறைவு விழாவில் பங்கேற்று உரை, அஜாக்சியோ தலத்திருஅவை ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவறத்தார் சந்திப்பு, மாலையில் திருப்பலி மறையுரை, பிரெஞ்சு அரசுத்தலைவர் சந்திப்பு என தனது ஒருநாள் திருத்தூதுப் பயணத்தை நல்ல முறையில் நிறைவு செய்து சாந்தா மார்த்தா இல்லம் திரும்பினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 December 2024, 11:50