மனித மாண்பை மீட்டெடுப்பதில் நாம் கவனம் செலுத்துவோம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உலகளாவிய பொது நன்மையை உறுதி செய்வதற்கும் மேம்படுத்துவதற்கும் நிலையான மற்றும் ஒருங்கிணைந்த மனித வளர்ச்சிக்கான முயற்சி மிகவும் முக்கியமானது என்றும், இந்தக் காரணத்திற்காக, நமது அனைத்து கவலைகள் மற்றும் செயல்பாடுகளின் இதயத்தில் மனித நபரை வைப்பது அவசியம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 11, புதன்கிழமை இன்று, மனித பொருளாதார மன்றத்தின் பங்கேற்பாளர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரை நிகழ்த்தியபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, முக்கியமான பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளைக் கையாளும் உங்களின் இந்தச் சந்திப்பு, மனித நிலைத்தன்மையின் கருப்பொருளில் (human sustainability) கவனம் செலுத்துகிறது என்பதையும் அவர்களுக்குச் சுட்டிக்காட்டினார்.
வறுமையை எதிர்த்துப் போராடுவதற்கும், ஒதுக்கப்பட்டவர்களின் மனித மாண்பை மீட்டெடுப்பதற்கும், நமது பொதுவான இல்லமாகிய இந்தப் பூமியைக் கவனிப்பதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் உறுதியான நபர்களின் மாண்பு மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
மனித ஊக்குவிப்புத் திட்டங்கள் சுய-நிலையான மற்றும் நீண்ட கால பொருளாதார அமைப்புகளால் ஆதரிக்கப்படும் அளவிற்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, ஆகவே, தற்போதைய சூழ்நிலையைப் பற்றிய உங்கள் ஆய்வில், உங்கள் மன்றம் உலகளாவியப் பார்வையை ஏற்றுக்கொண்டது பாராட்டுக்குரியது என்றும், பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த நிபுணத்துவ சொற்பொழிவாளர்களின் ஈடுபாடு, அனைத்து மனிதத் தேவைகளையும் பாராட்டுவதையும், உணர்திறனையும் ஊக்குவிக்கிறது என்றும் விளக்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்