தேடுதல்

கிறிஸ்து பிறப்புக் குடில் கிறிஸ்து பிறப்புக் குடில்  (ANSA)

கடவுளால் அன்பு செய்யப்படுவதே உண்மையான அழகு

ஒளி மற்றும் அமைதி, ஏழ்மை மற்றும் நிராகரிப்பு ஆகியவற்றைக் கிறிஸ்து பிறப்புக் குடில் அடையாளப்படுத்துகின்றது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

உண்மையான அழகு என்பது கடவுளால் அன்பு செய்யப்படுவது என்றும், பாலன் இயேசுவைச் சந்திக்கச் சென்ற இடையர்களோடு நாம் எப்படி இருக்கின்றோமோ அப்படியே நம்மை இயேசுவிடம் கொண்டு செல்வோம் என்றும் குறுஞ்செய்தி ஒன்றில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 30 திங்கள் கிழமையன்று ஹேஸ்டாக் கிறிஸ்து பிறப்பு என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள குறுஞ்செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உண்மையான கிறிஸ்து பிறப்புக் காலத்திற்குள் நுழைவோம் என்றும் அச்செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

ஒளி மற்றும் அமைதி, ஏழ்மை மற்றும் நிராகரிப்பு ஆகியவற்றை அடையாளப்படுத்தும் கிறிஸ்து பிறப்புக் குடிலைப் பார்ப்போம், உண்மையான கிறிஸ்து பிறப்புக் காலத்திற்குள் இடையர்களோடு நுழைவோம். நாம் எப்படி இருக்கின்றோமோ அப்படியே நம்மை இயேசுவிடம் கொண்டுவருவோம். உண்மையான கிறிஸ்து பிறப்பின் ஆற்றலை சுவைப்போம். கடவுளால் அன்பு செய்யப்படுதலே உண்மையான அழகு என்பதை உணர்வோம் என்றும் அச்செய்தியில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 December 2024, 11:23